search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bagavathi Perumal"

    சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
    கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

    இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.



    பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

    கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.



    காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.



    ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

    சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.

    பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.



    "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar

    கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில் - சமந்தா - ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் `சூப்பர் டீலக்ஸ்' படத்தின் விமர்சனம். #SuperDeluxe #SuperDeluxeReview
    பகத் பாசில் - சமந்தா இருவரும் கணவன் மனைவி. இருவரும் பெரிதாக புரிதல் இல்லாமல் இருக்கின்றனர். ஒருநாள் இவர்களது வீட்டுக்கு வரும் சமந்தாவின் நண்பர் அங்கு மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.

    மறுபக்கம் காயத்ரியை திருமணம் செய்துகொண்ட விஜய் சேதுபதி, காயத்ரிக்கு குழந்தை பிறந்த நிலையில் வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்கு பிறகு தனது மகனை பார்க்க மீண்டும் சென்னை வருகிறார். விஜய் சேதுபதியை வரவேற்க அவர்களது மொத்த குடும்பமும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். அவர் திருநங்கையாக வந்து நிற்க அனைவருக்கும் பேரதிர்ச்சி.



    மற்றொரு புறத்தில் ரம்யா கிருஷ்ணன் - மிஷ்கின் தம்பதிக்கு ஒரு மகன். அவனுக்கு நான்கு நண்பர்கள். இவர்களது வாழ்க்கையில் ஏற்படும் ஒரு சம்பவம்.

    இந்த மூன்று சம்பவங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள், போலீஸ் அதிகாரியான பகவதி பெருமாளுடன் ஒரு புள்ளியில் இணைகிறார்கள்.



    கடைசியில் பகத் பாசில் - சமந்தா எப்படி தப்பித்தார்கள்? விஜய் சேதுபதி குடும்பத்தின் நிலை என்ன? ரம்யா கிருஷ்ணன் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம்? இவை அனைத்தும் கலந்த நல்லது, கெட்டது தான் படத்தின் மீதிக்கதை.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக, அவர்களது உணர்வையும், வலியையும் உணர வைக்கும்படி நடித்திருக்கிறார். போலீசிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள், மகனிடம் காட்டும் பாசம், மனைவியின் வலியை புரிந்து கொள்வது என தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றியிருக்கிறார்.



    சிறிய சிறிய இடங்களில் கூட தனது நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார் பகத் பாசில். சமந்தாவுக்கு சவாலான வேடம். அந்த வேடத்தை ஏற்றுக் நடித்தது சமந்தாவின் துணிச்சல். சிறப்பாக நடித்திருக்கிறார். காயத்ரிக்கு அதிகமாக வசனங்கள் இல்லை என்றாலும் பார்வையாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ரம்யா கிருஷ்ணன் தனது அனுபவ நடிப்பால் அசத்தியிருக்கிறார். மிஷ்கின் கிறிஸ்தவ போதகராக தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    பகவதி பெருமாள் காமெடி கலந்த வில்லத்தனத்தில் சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் எரிச்சலையும் உண்டு பண்ணுகிறார்.



    நண்பர்களாக வரும் 4 இளைஞர்களும் சேட்டை செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். கொடுத்த வேலையை சிறப்பாக செய்து அசத்தியிருக்கிறார்கள். விஜய் சேதுபதியின் மகனாக மாஸ்டர் அஸ்வந்த் விஜய் சேதுபதிக்கு ஈடுகொடுத்து நடித்திருப்பது சிறப்பு. மிருணாலினி அழகு தேவதையாக வந்து செல்கிறார்.

    தியாகராஜன் குமாரராஜாவின் 8 வருடங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை என்று கூறும்படி, தனது ஸ்டைலில் அனைத்தும் கலந்த ஏ சான்றிதழ் படத்தை உருவாக்கியிருக்கிறார். எனவே குடும்பத்தோடு சென்று பார்க்க முடியாவிட்டாலும், இளைஞர்களை கவரக்கூடியதாய் இருக்கிறது. முதல் பாதி காமெடி கலந்த விறுவிறுப்புடனும், இரண்டாவது பாதி காமெடி கலந்த சஸ்பென்சுடனும் நகர்கிறது. இரண்டாவது பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். 



    படத்தில் கடவுள் பக்தி, கணவன் - மனைவி புரிதல், திருநங்கைகளின் குடும்பம், பாலியல் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை, சாதி, மதம் என பலவற்றை திரைக்கதையினூடே திணித்திருக்கிறார். நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உலகத்தில் அனைவரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒரு செயல் ஒருவருக்கு நன்மையை கொடுத்தால் மற்றொருவருக்கு தீமையை தான் கொடுக்கும். அதுவே நியதி என்பதை புரிய வைத்திருக்கிறார். அனைத்தும் சரியுமில்லை, அனைத்தும் தவறுமில்லை, சரியாய் இருப்பது தவறாய் மாறலாம், தவறாய் இருப்பது சரியாய் மாறலாம் என்பனவற்றை விளங்க வைத்திருக்கிறார்.

    யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். காட்சிகளை புதிய பரிணாமத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் நிரவ் ஷா, பி.எஸ்.வினோத். சத்யராஜ் நடராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

    மொத்தத்தில் `சூப்பர் டீலக்ஸ்' சுறுசுறுப்பு. #SuperDeluxe #SuperDeluxeReview #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். #SuperDeluxe
    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.



    படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முன்னோட்டம். #SuperDeluxe #VijaySethupathi
    கினோ ஃபெஸ்ட் நிறுவனம் சார்பில் தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

    விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், விஜய் ராம், நவீன் மற்றும் ஜெயந்த், மனுஷ்யபுத்திரன், அப்துல் ஜாபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - பி.எஸ்.வினோத், நிரவ் ஷா, இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - சத்தியராஜ் நடராஜன், கலை - விஜய் ஆதிநாதன், ஒலி வடிவமைப்பு - தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பு - எஸ்.டி.எழில்மதி, தயாரிப்பு மேற்பார்வை - அருண் அருணாச்சலம், சிறப்பு ஒலி வடிவமைப்பு - அருண் சீனு, நிர்வாக தயாரிப்பு - சத்தியராஜ் நடராஜன், சுவாதி ரகுராமன், எழுத்து - நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், மிஷ்கின், எழுத்து, இயக்கம், தயாரிப்பு - தியாகராஜன் குமாரராஜா.



    படம் பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

    ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும் என்றார். 

    சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. #SuperDeluxe #VijaySethupathi #FahadhFaasil #Samantha

    சூப்பர் டீலக்ஸ் டிரைலர்:

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி அவரது முதல் காட்சிக்கு 80 டேக்குகள் வரை எடுத்ததாக விஜய் சேதுபதி கூறியதாக ரம்யா கிருஷ்ணன் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தைத் தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 29ந்தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது. இந்த படம் பற்றி ரம்யா கிருஷ்ணன் ஒரு பேட்டியில் “என் வாழ்க்கையிலேயே இத்தனை டேக்குகள் வாங்கியது இல்லை. இதன்பிறகும் இத்தனை டேக்குகள் வாங்குவேனா என்று தெரியாது. 

    முதலில் தியாகராஜன் குமாரராஜா என்னைச் சந்திக்க பெங்களூரு வந்தார். அப்போது நான் மிகவும் கூலாக, ‘என்னுடைய முதல் ஷாட் எப்போதும் சிறந்ததாக இருக்க வேண்டும்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘கண்டிப்பாக, முயற்சி செய்யலாம்...’ என்று கூறினார்.



    முதல் ஷாட் 37 டேக்குகள் எடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி தனக்கு 80 டேக்குகள் தேவைப்பட்டது என்று கூறினார். அப்போது அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அன்று மாலை என்னுடைய ஷூட்டிங் தொடங்கியபோதுதான் அவர் கூறிய 80 டேக்குகள் பற்றி புரிந்தது”. இவ்வாறு அவர் கூறினார். #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadFaasil #RamyaKrishnan

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29-ல் ரிலீசாகிறது. செம டிரைலர் வெகு விரைவில், நாளை வெளியாகிறது என்று கூறியுள்ளார்.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை.

    படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் விநியோக உரிமையை ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் விநியோக உரிமையை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது. #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.

    படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒய் நாட் ஸ்டூடியோஸின் சசிகாந்த் யு நாட்எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் சூப்பர் டீலக்ஸ் படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். யு நாட்எக்ஸ் வெளியிடும் முதல் படம் சூப்பர் டீலக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நடிகையாக நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். #SuperDeluxe #RamyaKrishnan
    ‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

    இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும்.



    இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ஆபாசப் பட நடிகை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதுபற்றி பேட்டி ஒன்றில் குமாரராஜா பேசும் போது, “இந்தப் படத்துக்குள் இடம்பெறும் ‘மல்லு அன்கட்’ என்கிற ஆபாசப் படத்தில் நடிப்பவராக ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்தது வித்தியாசமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார். #SuperDeluxe #VijaySethupathi #RamyaKrishnan

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றத்தை பார்த்து நாயகிகள் பலரும் பொறாமைப்பட்டனர். #SuperDeluxe #VijaySethupathi
    ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா சில வருட இடைவெளிக் குப் பின் இயக்கியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

    ஷில்பா என்ற திருநங்கை வேடத்திலும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பகத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றத்தை பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். முக்கியமாக திரிஷா உள்ளிட்ட சில கதாநாயகிகளே விஜய் சேதுபதியின் தோற்றத்தை பகிர்ந்து இவரை பார்த்தால் எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.



    இந்த தோற்றம் பற்றி தியாகராஜன் குமரராஜா கூறும்போது ‘ஷில்பா கேரக்டரை எப்படி யோசித்து டிசைன் பண்ணினேன்னு சொல்லத் தெரியல. இந்த கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புகொண்டது பெரிய வி‌ஷயம். ஷில்பாவோட லுக் நல்லா வரணும்ங்கிறதுல அவர் ரொம்பவே மெனக்கெட்டார்’ என்று கூறியுள்ளார். #SuperDeluxe #VijaySethupathi

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஒரு முக்கிய காட்சிக்காக நடிகை ரம்யா கிருஷ்ணன் 88 ரீடேக் எடுத்ததாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #SuperDeluxe #RemyaKrishnan
    ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை பெற்ற இவர், 7 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

    படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    படத்தை தயாரித்து, இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது, ‘இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை.



    இதில் ஒரு முக்கிய வேடத்தில் லீலா என்ற கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் தற்போது ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். படத்தின் முக்கியமான ஒரு காட்சியை 88 ரீடேக் எடுத்தோம். இந்த காட்சிக்காகவே நதியா படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்லாம். இரண்டு நாட்களாக நதியாவை வைத்து அந்த காட்சியை படமாக்க முயற்சித்தோம். ரம்யா கிருஷ்ணன் 88வது டேக் எனக்கு திருப்தி அளிக்காவிடில் படத்தை விட்டு வெளியேறுவதாக கூறினார்’. #SuperDeluxe #VijaySethupathi #RemyaKrishnan

    தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் சமந்தா துணிச்சலான வேடத்தில் நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்தார். #SuperDeluxe #Samantha
    ஆரண்ய காண்டம் படம் மூலம் இந்திய அளவில் கவனிப்பை பெற்றவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. 7 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

    படத்தில் ஷில்பா என்னும் திருநங்கை வேடத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறார். சமந்தா வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    படத்தை தயாரித்து இயக்கி இருக்கும் தியாகராஜன் குமாரராஜா படம் பற்றி கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.



    ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும். இந்த படம் ஆந்தாலஜி வகையை சேர்ந்தது என்று செய்தி வெளியானது. அப்படி இல்லை. ஒரே கதை தான். சில மணி நேரங்களில் நடக்கும் கதை’ என்று அவர் கூறினார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத், நீரவ் ஷா இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். #SuperDeluxe #Samantha

    ×