என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
செம்மயான டிரைலர் வருது.. சூப்பர் டீலக்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Byமாலை மலர்21 Feb 2019 12:00 PM GMT (Updated: 21 Feb 2019 12:00 PM GMT)
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #SuperDeluxe #VijaySethupathi
‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை வெளியாக இருப்பதாகவும், படம் வருகிற மார்ச் 29-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சூப்பர் டீலக்ஸ் படம் மார்ச் 29-ல் ரிலீசாகிறது. செம டிரைலர் வெகு விரைவில், நாளை வெளியாகிறது என்று கூறியுள்ளார்.
#SuperDeluxe releasing on March 29th. Semma trailer coming soon 😍😍#SuperDeluxeTrailerFromTomorrow@itisthatis@Samanthaprabhu2#FahadhFaasil@thisisysr@SGayathrie@ynotxworld@gopiprasannaapic.twitter.com/dXjnu2eatj
— VijaySethupathi (@VijaySethuOffl) February 21, 2019
இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை. ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை.
படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் விநியோக உரிமையை ஒய்நாட் எக்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha #FahadhFaasil
Super Deluxe Thiagarajan Kumararaja Mysskin Nalan Kumarasamy Neelan Shankar Vijay Sethupathi Samantha Fahadh Faasil Yuvan Shankar Raja Gayathrie shankar Bagavathi Perumal Aneethi Kadhaigal Ramya Krishnan சூப்பர் டீலக்ஸ் மிஷ்கின் தியாகராஜன் குமாரராஜா நலன் குமாரசாமி நீலன் சேகர் விஜய் சேதுபதி பகத் பாஷில் சமந்தா காயத்ரி பகவதி பெருமாள் யுவன் ஷங்கர் ராஜா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X