என் மலர்

  சினிமா

  சூப்பர் டீலக்ஸ்
  X

  சூப்பர் டீலக்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி - பகத் பாசில், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் முன்னோட்டம். #SuperDeluxe #VijaySethupathi
  கினோ ஃபெஸ்ட் நிறுவனம் சார்பில் தியாகராஜன் குமாரராஜா தயாரித்துள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’.

  விஜய் சேதுபதி இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள், விஜய் ராம், நவீன் மற்றும் ஜெயந்த், மனுஷ்யபுத்திரன், அப்துல் ஜாபர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - பி.எஸ்.வினோத், நிரவ் ஷா, இசை - யுவன் ஷங்கர் ராஜா, படத்தொகுப்பு - சத்தியராஜ் நடராஜன், கலை - விஜய் ஆதிநாதன், ஒலி வடிவமைப்பு - தபஸ் நாயக், ஆடை வடிவமைப்பு - எஸ்.டி.எழில்மதி, தயாரிப்பு மேற்பார்வை - அருண் அருணாச்சலம், சிறப்பு ஒலி வடிவமைப்பு - அருண் சீனு, நிர்வாக தயாரிப்பு - சத்தியராஜ் நடராஜன், சுவாதி ரகுராமன், எழுத்து - நலன் குமாரசாமி, நீலன் கே.சேகர், மிஷ்கின், எழுத்து, இயக்கம், தயாரிப்பு - தியாகராஜன் குமாரராஜா.  படம் பற்றி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது ‘சமந்தா இடம்பெறும் காட்சியில் தான் படம் தொடங்கும். மிகவும் துணிச்சலான காட்சி அது. முக சுளிப்பே இல்லாமல் இயல்பாக நடித்துக்கொடுத்தார். இந்த படத்தின் கதையை ஓரிரு வரிகளில் கூற முடியாது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 13 கதாபாத்திரங்கள் இணையும் புள்ளிகள் தான் கதை.

  ஒருவரது வாழ்க்கை மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதே திரைக்கதை. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவத்தை தரும் என்றார். 

  சூப்பர் டீலக்ஸ் படம் வருகிற மார்ச் 29-ந் தேதி திரைக்கு வருகிறது. #SuperDeluxe #VijaySethupathi #FahadhFaasil #Samantha

  சூப்பர் டீலக்ஸ் டிரைலர்:

  Next Story
  ×