search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashok Kumar"

    • எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
    • இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் எஸ்.ஆர்.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'இமெயில்'. இப்படத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக 'முருகா' அசோக்குமார் நடித்துள்ளார். இரண்டாவது கதாநாயகியாக போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக ஆதவ் பாலாஜி நடித்துள்ளார்.


    இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 30 படங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட செல்வம் முத்தப்பன் இப்படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜேஷ் குமார் இப்படத்தின் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது.

    இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


    இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால் அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.


    படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது.


    அதுமட்டுமல்ல நிறைய இளைஞர்கள் செருப்படியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி செருப்பை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன் அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்ல. சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது.


    ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்கி சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும் என்று கூறினார்.

    • பல முறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
    • அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு உடல்நிலை சீரடைந்ததையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    இதையடுத்து அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

    இததற்கிடையே சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பல முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனை தொடர்ந்து அசோக் குமார் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவரது மனைவி பெயரில் கட்டப்பட்டு வரும் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் வைத்து அசோக் குமாரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

    சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
    கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

    இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.



    பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

    கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.



    காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.



    ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

    மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

    சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.

    பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.



    "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar

    கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:

    ×