என் மலர்

  நீங்கள் தேடியது "Gangs of Madras"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.வி.குமார் இயக்கத்தில் அசோக் - சாய் பிரியங்கா ருத் நடிப்பில் உருவாகியிருக்கும் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனம். #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar
  கல்லூரியில் படிக்கும் போது அசோக் - சாய் பிரியங்கா ருத் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தனது மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தனக்கு தெரிந்தவர் மூலமாக கடத்தல் தொழில் செய்யும் கும்பலிடம் கணக்காளராக வேலைக்கு சேர்கிறார் அசோக்.

  இந்த நிலையில், ஒருநாள் அவர்கள் கொடுத்த வேலைக்காக மும்பை சென்று திரும்பும் போது போலீசார் அசோக்கை என்கவுண்டர் செய்கிறார்கள். கணவனை இழந்த சாய் பிரியங்கா, அசோக்கை போலீசார் என்கவுன்டர் செய்ய காரணம் என்ன, அதன் பின்னால் உள்ளவர்கள் யார் என்பது பற்றி அலசுகிறார்.  பின்னர் அசோக்கை கொலை செய்தவர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அதற்காக மும்பையில் இருக்கும் டேனியல் பாலாஜியின் உதவியை நாடுகிறார். பிரியங்கா மூலமாக சென்னையில் மீண்டும் கடத்தல் தொழிலை ஆரம்பிக்க திட்டமிடும் டேனியல் பாலாஜி, பிரியங்காவுக்கு உதவுகிறார்.

  கடைசியில், அசோக் கொலைக்கு காரணமானவர்களை பிரியங்கா பழிவாங்கினாரா? டேனியல் பாலாஜியின் திட்டம் பலித்ததா? என்பதே கேங்ஸ் ஆஃப் மெட்ராஸின் மீதிக்கதை.  காதல், ஆக்‌ஷன், கோபம் என படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய வேடத்தில் வருகிறார் பிரியங்கா ரூத். டேனியல் பாலாஜியிடம் தொழில் கற்றுக் கொள்ளும் போதும், அதன் பின்னர் செய்யும் கொலைகள் என சிறப்பாக நடித்திருக்கிறார். அசோக் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன் வில்லத்தனத்தில் விளையாடியிருக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக ஆடுகளம் நரேன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  தனது காதல் கணவனுக்காக பழிவாங்கும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் சி.வி.குமார். படத்திற்கு கிடைத்த ஏ சான்றிதழுக்கு ஏற்ப படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பி இருக்கிறது. இதில் இரத்தம் தெறிக்கும் ஒருசில ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித நெருடலை ஏற்படுத்துகிறது. அதுவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.  ஹரி டப்யூசியாவின் பின்னணி இசையும், கார்த்திக் கே.தில்லையின் ஒளிப்பதிவும், மஞ்சள் நிறமான பின்னணியும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

  மொத்தத்தில் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' இரத்தக்களரி. #GangsOfMadras #GangsOfMadrasReview #CVKumar #SaiPriyankaRuth #AshokKumar #DanielBalaji

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் முன்னோட்டம். #GangsofMadras #CVKumar
  திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்துள்ள படம் `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்'.

  பிரியங்கா ருத் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், பகவதி பெருமாள், டைரக்டர் ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

  இசை - ஹரி டஃபுசியா, இசை (OST) - ஷ்யமளங்கன், இசை மேற்பார்வை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - கார்த்திக் கே.தில்லை, படத்தொகுப்பு - ராதாகிருஷ்ணன் தனபால், கலை - விஜய் ஆதிநாதன், சிவா, சண்டைப்பயிற்சி - ஹரி தினேஷ், சவுண்ட் டிசைன் - தாமஸ் குரியன், நடனம் - சாண்டி, நிர்வாக தயாரிப்பு - எஸ்.சிவகுமார், தயாரிப்பு, இயக்கம் - சி.வி.குமார்.  "மாயவன்" திரைப்படத்திற்கு பிறகு சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. தேவைகள் ஆசையாக மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகளே "கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்" படத்தின் கதைக்கரு.

  படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #GangsofMadras #CVKumar

  கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீசர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #GangsOfMadras
  பீட்சா, சூது கவ்வும் என பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.

  பிறகு இயக்கத்தின் பக்கம் தலைதிருப்பிய சிவி குமார், தனது முதல் படைப்பாக மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து தரப்பிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனது இரண்டாவது இயக்கமாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் சிவி குமார்.  இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பலரால் இந்த டீசர் பெரும் பாராட்டுக்குள்ளானது. குறிப்பாக ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினைப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தவர் இளம் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஆவார்.

  இப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.வி. சீரியல்களில் நடித்து வந்த சாய் பிரியங்கா, தற்போது புதிய படத்தில் போதை கடத்தல் ராணியாக நடித்திருக்கிறார். #SaiPriyanka #GangsOFMadras
  சென்னையில் நிகழும் போதை உலக ரகசியங்களை பற்றி ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்ற படம் தயாராகியுள்ளது. ’ஆசைக்கும் தேவைக்கும் நடுவுல ஒரு சின்ன கோடுதான்’ என தொடங்கும் படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். டீசருக்கும் டீசரில் இடம்பெற்ற காட்சிகளுக்காகவும் கார்த்திக் குமார் ஒளிப்பதிவுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

  படத்தை இயக்கி தயாரித்து இருக்கும் சிவி.குமாரிடம் கேட்டபோது ‘இது நகரத்தின் இன்னொரு பக்கத்தை காட்டும். இயக்குனர் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, அசோக், விஷ்வா ஆகியோர் வில்லன்களாக நடிக்க சாய் பிரியங்கா நாயகியாக நடிக்கிறார்.

  ஆடுகளம் நரேன், பி.எல்.தேனப்பன் ஆகியோரும் நடித்துள்ளனர். ராத் கரிஷ் படத்தொகுப்பு செய்ய, ஹரி டபுசியா இசையமைத்து இருக்கிறார். டிவி சீரியல்களில் நடித்து வந்த பிரியங்காவை கதாநாயகியாக்கி இருக்கிறோம். போதை கடத்தல் கும்பலின் தலைவியாக நடித்து இருக்கிறார். கணவனுக்காக கும்பலில் சேரும் அவர் எப்படி திசை மாறுகிறார் என்பதே கதை. வேலு பிரபாகரனின் வில்லத்தனம் புதிதாக இருக்கும். ஹெராயின் என்ற விலை உயர்ந்த போதைப்பொருளை பின்னணியாக கொண்ட கதை. இந்தி படம் பார்த்த உணர்வு கிடைக்கும். தமிழுக்கு மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும்’ என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  'மாயவன்’ படத்தை தொடர்ந்து சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #CVKumar
  அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என படங்களை தயாரித்தார். 

  தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இப்படத்தை அடுத்து ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை பிப்ரவரி 20ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த சி.வி.குமார், ‘மாயவன்’ படத்தை தொடர்ந்து கேங்காக ஒரு படத்தை இயக்க இருக்கிறார். #CVKumar
  அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக காலடி எடுத்து வைத்தவர் தயாரிப்பாளர் சி.வி.குமார். தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி என மிக குறுகிய காலத்தில் பல தரமான படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறார்.

  தயாரிப்பாளரான சி.வி.குமார், ‘மாயவன்’ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, அக்‌ஷரா கவுடா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.   திரில்லர் கதையாக உருவான இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார். இவர் அடுத்ததாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’  என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
  ×