என் மலர்
சினிமா

ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்த கேங்ஸ் ஆப் மெட்ராஸ்
சிவி குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. #GangsOfMadras
பீட்சா, சூது கவ்வும் என பல வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் என்டர்டெயிண்மென்ட் நிறுவனம் சார்பில் சிவி குமார் தயாரித்திருந்தார்.
பிறகு இயக்கத்தின் பக்கம் தலைதிருப்பிய சிவி குமார், தனது முதல் படைப்பாக மாயவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் அனைத்து தரப்பிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தனது இரண்டாவது இயக்கமாக ‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ என்னும் படத்தினை இயக்கியுள்ளார் சிவி குமார்.

இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானது. பலரால் இந்த டீசர் பெரும் பாராட்டுக்குள்ளானது. குறிப்பாக ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பாராட்டினைப் பெற்றது. இப்படத்திற்கு சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்திருந்தவர் இளம் ஒளிப்பதிவாளரான கார்த்திக் கே தில்லை ஆவார்.
இப்படம் ஏப்ரல் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story