என் மலர்
சினிமா செய்திகள்
திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #Mahendran
புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, பூமராங், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக இயக்குனர் மகேந்திரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது மகன் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு கமெண்ட்களை பதிவு செய்திருக்கிறார்கள். #Andrea
ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.
இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.

தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். கச்சிதமான அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று சில ரசிகர்கள் கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த கவர்ச்சி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
சூர்யா தயாரிப்பில் விஜய்குமார் நடித்து இயக்கி இருக்கும் ‘உறியடி 2’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Uriyadi2 #Uriyadi2ReleaseDate
`உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய்குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
அதையும் விஜய்குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.

விஜய்குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் சுதாகர், ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி, தமிழ் படங்களை தொடர்ந்து, தெலுங்கில் புதிய படத்தில் நடித்து வருகிறார். #DD
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.

டிடி தற்போது தெலுங்கில் உருவாகும் ரொமாண்டிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ்பூரி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சார்மி கவுர் கதாநாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத் இயக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நிறைவடைந்துள்ளது.
இந்தத் தகவலை டிடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியிருந்த நிலையில் சார்மி அதை பகிர்ந்துள்ளார். ‘டிடி உங்களது சூப்பர் எனர்ஜெடிக் கதாபாத்திரத்தை மக்கள் பார்க்க இனியும் காத்திருக்கமுடியாது” என்று சார்மி தெரிவித்துள்ளார். டிடிக்கு கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தன்னைப் பற்றி வரும் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார். #SonakshiSinha
சமூக வலை தளங்களில் நடிகைகள் அவர்களது உடலமைப்பு குறித்து தொடர்ந்து மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். சில நடிகைகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றனர். சிலர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர்.
தற்போது நடிகை சோனாக்ஷி சின்ஹா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். சோனாக்ஷி குண்டாக இருப்பதாக தொடக்கத்தில் விமர்சனங்களை சந்தித்தவர். ‘உங்களுக்குப் பிடித்தால் என்னைப் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். விமர்சனங்கள் என்னை மெருகேற்ற உதவுகின்றன. அவற்றை மகிழ்ச்சியுடன் படிக்கிறேன். ஆனால், வீட்டில் சண்டை போட்டு வந்த கோபத்தில் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலோ, என்னை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று விமர்சனங்களை வைத்தாலோ ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர வேண்டும், கருத்துகளைப் பதிவிட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சோனாக்ஷி கதாநாயகியாக நடித்திருந்தார்.
காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள கீ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்பதே கீ என்பதன் பொருள் என்று ஜீவா கூறினார். #KEE
ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் 12-ந் தேதி வெளியாக இருக்கிறது. காலீஸ் இயக்கிய இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜீவா அளித்த பேட்டி:
பெயரை பார்த்தால் ஆங்கில படம் போல் தெரிகிறதே?
கீ என்பது தமிழ் வார்த்தை தான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இருக்கும். இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது. எனக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி எனக்கு நண்பராக வருகிறார்.
கல்லூரி மாணவர் வேடமா?
எனக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் நன்றாக வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவராக நடிப்பது எளிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு விஷயங்கள் தெரிகிறது. எனவே இனி கல்லூரி மாணவராக நடிப்பது சிரமம். இந்த படத்தில் ஜாலியான ஹேக்கராக வருகிறேன். கல்லூரி மாணவருக்கே உரிய அனைத்து விஷயங்களும் என் கதாபாத்திரத்தில் இருக்கும்.

உங்கள் சமூகவலைதள கணக்குகள் ஹேக் ஆகி இருக்கிறதா?
நிறைய முறை ஆகி இருக்கிறது. எந்த பாஸ்வேர்டு வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இன்று இணைய திருடர்கள் அதிகரித்து விட்டார்கள். இனி இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.
இரும்புத்திரை படமும் இதே போன்றது தானே?
இல்லை. நாங்கள் படப்பிடிப்பையே முடித்த பின்னர்தான் அவர்கள் பூஜை போட்டார்கள். அந்த கதை முழுக்க பணம், வங்கி, ஏடிஎம் கார்டு பற்றியது. ஆனால் இது முழுக்க சமூகவலை தளங்களில் நீங்கள் இடும் லைக்குகள், கமெண்டுகள் பற்றியது.
ரிலீஸ் நேரத்தில் சிக்கல், பட வெளியீடு தாமதம் என்று ஹீரோக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறதே?
ஆமாம். கீ படமே பெரிய தாமதத்துக்கு பின் தான் ரிலீஸ் ஆகிறது. இங்கே ஹீரோவாக இருப்பது சிரமமாக தான் இருக்கிறது. காமெடி, குணச்சித்திர நடிகராக இருப்பது எளிது. ஹீரோவாக இருப்பதால் மற்றவர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. சினிமா என்பது டீம் வொர்க். யாராவது ஒருவர் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது எல்லோரையும் பாதிக்கும்.
ஒரு படத்தில் கமிட் ஆனால் அதை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கு முன் தயாரிப்பு பணிகளில் திட்டமிடல் மிகவும் அவசியம். #KEE #Jiiva #NikkiGalrani
சுந்தர்.சி - விஷால் புதிய படத்திற்காக மீண்டும் இணைந்துள்ள நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளனர். #Vishal #Tamannaah
விஷால் - தமன்னா இணைந்து ஏற்கனவே கத்திச் சண்டை படத்தில் நடித்திருந்தனர். நகைச்சுவை கதாபாத்திரங்களில் வடிவேலு, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் வரவேற்பு பெறவில்லை.
அதைத் தொடர்ந்து இருவரும் சுந்தர்.சி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், தற்போது படக்குழு துருக்கிக்கு சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளது.

அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. முக்கிய காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் ஆகியவற்றை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தமன்னா மீண்டும் விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.
அந்தப் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. #Vishal #Tamannaah #SundarC
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது கதாநாயகியை முடிவு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் கவனம் பெற்ற ராஷ்மிகா, தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் மூலம் தமிழில் கதநாயகியாக அறிமுகமாகும் ராஷ்மிகா இந்தப் படத்தில் விரைவில் இணைய உள்ளதாக செய்தி வந்தது. படக்குழுவோ திரைக்கதை பணிகள் இன்னும் முடியவில்லை.
அதன் பின்னர்தான் நாயகி பற்றி அறிவிப்பு வரும் என்கிறது. படம் குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், “இதற்கு முன் வேறொரு கதையை அவரிடம் கூறினேன். அப்போது மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். நானும் வேறு படங்களில் பிசியாகிவிட்டேன். தற்போது எல்லாம் ஒன்றுசேர்ந்து வந்துள்ளது” என்று கூறியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. #SK17 #Sivakarthikeyan #RashmikaMandanna
அக்னி தேவி பட விவகாரத்தில் நடிகர் பாபி சிம்ஹா கொடுத்த வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் பாபி சிம்ஹா நடிப்பதற்கு தடை விதிப்பது குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. #AgniDevi #BobbySimha
ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி, பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’. இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா ஒரு புகார் கூறினார்.
நான் ஏமாற்றப்பட்டுள்ளேன். நான் டப்பிங் பேசவே இல்லை. எனக்கு டூப் போட்டு எடுத்த காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளார்கள்’ என்று கூறினார். படக்குழுவினர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.
அக்னிதேவி படம் கடந்த வாரம் ரிலீசானது. பட வெளியீட்டுக்குப் பிறகு, தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பாபி சிம்ஹா எப்படி எல்லாம் தங்களுக்கு தொல்லைகள் கொடுத்தார் என்று குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ‘பாபி சிம்ஹா மற்றும் ‘அக்னி தேவி’ படக்குழுவினர் கலந்து கொண்டனர். இரண்டு தரப்புக்குமே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விசாரித்தபோது படத்தின் மீது பாபி சிம்ஹா போட்டுள்ள மொத்த வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பாபி சிம்ஹா ஏதேனும் ஒரு வகையில் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதில் எதற்குமே ஒத்துழைக்க முடியாது என்று கூறிவிட்டு பாபி சிம்ஹா வெளியேறி இருக்கிறார்.
கூட்டத்தில் பேசிய விஷயங்கள் குறித்து தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
‘பாபி சிம்ஹாவுக்கு, அவரை டப்பிங் பேச வைக்கவில்லை என்பதுதான் பிரச்சினை. ஆனால் தயாரிப்பாளருக்கோ ரூ.10 கோடி வரை நஷ்டம். இயக்குனரே கஷ்டப்பட்டு படத்தை தயாரித்து இருக்கிறார். பாபி சிம்ஹாவுடன் ஏற்பட்ட பிரச்சினை, வட்டி கட்ட முடியவில்லை போன்ற சிக்கல்களால் படத்தை வெளியிட்டுவிட்டார்.
எங்களிடம், நடிகர் சங்கம் ஆகியோரிடம் வந்து தயாரிப்பாளர் உதவி கேட்டார். பேசி தீர்க்கலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் யார் என்ன சொன்னாலும் பாபி சிம்ஹா அவருடைய விஷயத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.
அந்த இயக்குனர் தலைமறைவாகும் அளவுக்கு என்ன தவறு செய்தார்? எப்.ஐ.ஆர் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?. சினிமா ஒன்றும் குற்றம் அல்ல. எதுவாக இருந்தாலும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். இப்படத்தால் வந்த நஷ்டத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். அதையும் முடியாது என்று சொல்லிவிட்டார்.
எதற்குமே ஒத்துழைக்கவில்லை என்றால், அவரை வைத்துப் படம் தயாரிக்க அனைவருமே யோசிப்பார்கள். அடுத்த வாரத்தில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் அனைத்து தயாரிப்பாளர்களையும் வரவைத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம். பாபி சிம்ஹா தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்’.
இவ்வாறு தயாரிப்பாளர் தெரிவித்தார். #AgniDevi #BobbySimha #JPR
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடித்துள்ள சமந்தா, படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து கணவர் நாக சைதன்யாவிடம் கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். #SuperDeluxe
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை வேடம் ஏற்றிருக்கிறார். இதில் சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமந்தா கதாபாத்திரம் வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறும்போது, “சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்து கணவரிடம் சொன்னபோது என்னை அதிர்ச்சியாக பார்த்தார் என்றார். ரம்யாகிருஷ்ணனும் சர்ச்சை கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை தோற்றம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. #SuperDeluxe #VijaySethupathi #Samantha
விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற தலைப்பில் உருவாகும் ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, லிங்குசாமி, பாரதிராஜா, விஜய் உள்ளிட்ட இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள். இவர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கையை ஒரே நேரத்தில் இயக்கி வருகின்றனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக இயக்கி வருகிறார்.
இதில் விஜய் இயக்கும் படத்திற்கு ‘தலைவி’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதுபற்றி இயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் தலைவி படப்பிடிப்பில் இணையவிருக்கிறார். படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்கவிருக்கிறது. #Thalaivi #KanganaRanaut
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss
பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரஜினிகாந்த் வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் இருப்பார். பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவோ ஆதரவு கேட்டோ அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காகவே தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் பிசியாகிவிடுவார்.
அப்படி இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தவர், தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருக்கப்போகிறார். #Rajinikanth166 #ARMurugadoss






