என் மலர்
சினிமா செய்திகள்
‘அக்னி தேவி’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #AgniDevi #BobbySimha
ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இயக்கி பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன், சதீஷ் நடிப்பில் வெளியான படம் ‘அக்னி தேவி’.
இந்த படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக பாபி சிம்ஹா இயக்குனர் மற்றும் படக்குழு மீது பல்வேறு புகார்களை கூறினார். தான் ஏமாற்றப்பட்டதாகவும், டூப் வைத்து எடுத்த காட்சிகளை தன் காட்சிகள் என்று படத்தில் வைத்திருப்பதாகவும் கூறி வழக்கும் தொடர்ந்தார்.
மேலும் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஜே.பி.ஆர் என்கிற ஜான் பால்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளாக எஸ்.எஸ்.துரைராஜ், பிரவீன் காந்தி உள்ளிட்டோர் இன்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் பாபிசிம்ஹா கூறிய குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், அவரால் தான் படக்குழு கடுமையாக பாதிக்கப்பட்டது, போலீசார் ஜான் பால்ராஜுக்கு எந்த நெருக்கடியும் தராமல் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AgniDevi #BobbySimha
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் - சினேகா இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒப்பந்தமாகி இருக்கிறார். #Dhanush
அஜித்குமார் - நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், சத்யஜோதி பிலிம்ஸ் தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை தயாரிக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸின் 34-வது படத்தை துரை செந்தில்குமாரும், 35-வது படத்தை ராம்குமாரும் இயக்குகின்றனர்.
இதில் துரை செந்தில்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன் சினேகா இணைந்து நடிக்கிறார்.

இந்த நிலையில், தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் சரபம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். மேலும் சில தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் - மெர்வின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். #Dhanush #Sneha #NaveenChandra
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பேச்சாளரும், நடிகருமான முனைவர் ஞானசம்பந்தம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முனைவர் ஞானசம்பந்தம் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஷாருக்கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படம், தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Thalapathy63 #Vijay63 #Vijay #Nayanthara #Kathir #Atlee
சர்ஜூன்.கே.எம் இயக்கத்தில் நயன்தாரா - கலையரசன், யோகி பாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஐரா' படத்தின் விமர்சனம். #Airaa #AiraaReview #Nayanthara #Kalaiyarasan #YogiBabu
பத்திரிகையாளரான நயன்தாராவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான ஜெயப்பிரகாஷ் - மீரா கிருஷ்ணன் முடிவு செய்கின்றனர். ஆனால் திருமணத்தின் மீது அதீத நாட்டம் இல்லாத நயன்தாரா சென்னையில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு சென்று விடுகிறார்.
கண் தெரியாத நயன்தாராவின் பாட்டியை யோகி பாபு கவனித்துக் கொள்கிறார். அங்கு சிறுவன் ஒருவனையும் நயன்தாரா சந்திக்கிறார். தனது பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இரவில் ஏதோ கருப்பு உருவம் அங்கு இருப்பது போலவும், அது தன்னை பின்தொடர்வதாகவும் தோன்றுகிறது. அது ஒருவித பயத்தையும் உண்டுபண்ணுகிறது. ஒருகட்டத்தில் பாட்டி மேலே இருந்து கீழேவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பின்னர் சிகிச்சை பலனின்றி பாட்டி இறந்துவிடுகிறார்.

மறுபுறத்தில் இதேபோன்று சில மர்ம மரணங்கள் நிகழ்கிறது. இதில் கலையரசனுக்கு சம்பந்தப்பட்ட ஒருவரும் இறந்துவிட, இந்த மரணங்கள் பற்றி கலையரசன் தகவல் சேகரிக்கிறார்.
கடைசியில், மர்ம மரணங்களுக்கு பின்னால் இருக்கும் அமானுஷ்ய சக்தி எது? நயன்தாரா பார்க்கும் நிழல் உருவம் என்ன? கலையரசனுக்கும், நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இருவிதமான தோற்றத்தில் வந்து நயன்தாரா
அவரது வேலையை சிறப்பாக செய்துவிட்டு போயிருக்கிறார். ஒரு தோற்றத்தில் நகரத்து சாயலிலும், மற்றொரு தோற்றத்தில் கிராமத்து பெண்ணுக்குண்டான சாயல், பேச்சு என வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். கலையரசன் தனது கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். பாட்டியாக வரும் குலப்புள்ளி லீலா, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன், மாதீவன், கேப்ரெல்லா என மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
எச்சரிக்கை படத்திற்கு பிறகு ஒரு முழு நீள த்ரில்லர் படத்தை இயக்கியிருக்கிறார் சர்ஜூன். முதல் பாதி காமெடி கலந்த திகிலாகவும், இரண்டாவது பாதி திகில் கலந்த செண்டிமெண்ட் காட்சிகளாகவும் இருக்கிறது. பொழுபோக்கு அம்சங்கள் குறைவாக இருந்தாலும், படம் முழுக்க பயமுறுத்தும் காட்சிகளாகவே நகர்கிறது. படத்தின் காட்சிகளுக்கு சுந்தரமூர்த்தியின் இசை உயிர்ப்பாக அமைந்திருக்கிறது.

சுந்தரமூர்த்தி.கே.எஸ்-ன் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக இதயத்துடிப்பு போன்ற மெல்லிய இசை திகிலை கூட்டுகிறது. சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. கார்த்திக் ஜோகேஷின் படத்தொகுப்பு கச்சிதம்.
மொத்தத்தில் `ஐரா' திகில்.
இயக்குநர் விஜய், நடிகை அமலாபாலுடன் விவாகரத்து பெற்ற நிலையில், விஜய்யும், நடிகை சாய் பல்லவியும் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவலுக்கு விஜய் விளக்கம் அளித்துள்ளார். #DirectorVijay #SaiPallavi
மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.
விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய படங்களை ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி உள்ளார். இந்த நிலையில் விஜய்க்கும், நடிகை சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் இயக்கிய தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
விஜய்க்கும், சாய் பல்லவிக்கும் ‘தியா’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, “என்னையும், சாய் பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்றார். #DirectorVijay #SaiPallavi
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் - தமன்னா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துருக்கி நடைபெற்று வரும் நிலையில் சண்டைக்காட்சியில் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. #Vishal
விஷால் நடிப்பில் அடுத்ததாக ‘அயோக்கியா’ படம் வருகிற ஏப்ரல் 19-ந் திரைக்கு வர இருக்கிறது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பை 50 நாட்கள் துருக்கி நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்காக விஷால், தமன்னா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த வாரம் துருக்கி புறப்பட்டுச் சென்றனர். அங்கு கேப்படோசியாவில் உள்ள மலைப்பகுதியில் விஷால் வில்லன்களுடன் மோதுவது போன்ற சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

காரில் செல்லும் வில்லன்களை 4 சக்கரம் உள்ள வெளிநாட்டு பைக்கில் விஷால் துரத்தி செல்வது போன்ற காட்சியை படமாக்கினர். அப்போது வேகமாக சென்ற பைக் திடீரென்று நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பைக்கில் இருந்த விஷால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் ‘எக்ஸ்ரே’ எடுத்து எலும்பு முறிவு இல்லை என்பதை உறுதி செய்தனர்.
கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. #Vishal #Tamannaah #SundarC
மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ள ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ElectionCommission #NarendraModi
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ‘மேரிகோம்’ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘மேரிகோம்’ படத்தை இயக்கிய ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கை முதல் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்று நாட்டின் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெற்றுள்ளன.
மோடி படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.
ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் “இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ElectionCommission #NarendraModi
பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ‘மேரிகோம்’ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘மேரிகோம்’ படத்தை இயக்கிய ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கை முதல் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வென்று நாட்டின் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் உள்ளிட்டவை படத்தில் இடம்பெற்றுள்ளன.
மோடி படம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படம் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்து உள்ளது.
ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் “இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #ElectionCommission #NarendraModi
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார். #AishwaryaRajesh
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஐரா’. இப்படம் நாளை வெளியாக இருக்கிறது. இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனம், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தை தயாரிக்கிறது.
‘இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மற்றொரு நடிகையாக ‘நாச்சியார்’ படத்தில் நடித்த இவானா நடிக்கிறார்.

‘ஹீரோ’ படத்திற்கு அடுத்ததாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘சித்துபாத்’ படம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. #Sindhubaadh #VijaySethupathi
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக `சூப்பர் டீலக்ஸ்' படம் திரைக்கு வர இருக்கிறது. அதேநேரத்தில் தான் ஒப்பந்தமாகியுள்ள மற்ற படங்களிலும் விஜய் சேதுபதி தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார், விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குகிறார். `சிந்துபாத்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கே புரொடக்ஷன்ஸ் மற்றும் வன்சன் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை ஏப்ரல் 11ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Sindhubaath #VijaySethupathi
தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பை மீறி என்.டி.ராமராவ் படத்தை வெளியிட தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. #NTR #Election
என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த ஜனவரியில் ‘என்.டி.ஆர். கதாநாயகடு’ என்ற படமும், இதன் இரண்டாம் பாகமாக என்.டி.ஆர். மகாநாயகடு என்ற படமும் வெளிவந்தன. இதில் என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடித்து இருந்தார்.
இரண்டு படங்களையும் அதிக பொருட்செலவில் படமாக்கி இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லாமல் நஷ்டம் அடைந்தது. இந்த படத்தில் என்.டி.ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி சம்பந்தமான காட்சிகள் இல்லை. இந்த விடுபட்ட கதையை தொகுத்து ‘லட்சுமி என்.டி.ஆர்’ என்ற பெயரில் புதிய படத்தை ராம்கோபால் வர்மா இயக்கினார்.
இதில் என்.டி.ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு துரோகம் செய்து ஆட்சியை கைப்பற்றியதுபோல் காட்சிகள் உள்ளன. படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. இந்த படம் சந்திரபாபு நாயுடுவுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதுபோல் உள்ளது என்றும், எனவே தேர்தல் காலத்தில் திரையிட அனுமதிக்க கூடாது என்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்தனர்.
இதைத்தொடர்ந்து படத்தை தேர்தல் கமிஷனுக்கு தயாரிப்பாளர் அனுப்பிவைத்தார். படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்தல் விதிமுறைக்கு எதிரான காட்சிகள் இல்லை என்று கூறி படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியா? என்பது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விளக்கம் அளித்து உள்ளார். #SanjayDutt #LokSabhaElections2019
நாடாளுமன்ற தேர்தலில் மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் சஞ்சய் தத் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவர் மறைந்த நடிகரும், காங்கிரஸ் தலைவருமான தனது தந்தை சுனில் தத்தை பின்பற்றி அரசியல் களத்தில் குதிப்பதாக கூறப்பட்டது. அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள காசியாபாத் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வலம் வந்தபடி இருந்தன.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக அவரை மையப்படுத்தி உலா வந்த இந்த தகவல்களுக்கு நடிகர் சஞ்சய் தத் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக பரவி வரும் தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மையில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் எனது சகோதரி பிரியா தத்துக்கு என் ஆதரவு உண்டு. நான் எனது நாட்டின் பக்கம் நிற்பேன். தேர்தலின் போது ஒவ்வொருவரும் வெளியில் வந்து நாட்டிற்காக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #Mahendran
புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் என்ற திரைப்படம் தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர் ரஜினியை வைத்து ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் சீதக்காதி, பூமராங், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது உடல் நலக்குறைவு காரணமாக இயக்குனர் மகேந்திரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது மகன் ஜான் மகேந்திரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மகேந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






