search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பா.ரஞ்சித்
    X
    பா.ரஞ்சித்

    இந்தி திரையுலகில் பா.ரஞ்சித்.. கொண்டாடும் ரசிகர்கள்

    தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பா. ரஞ்சித் இந்தி திரையுலகில் களம் இறங்கயிருக்கிறார்.
    'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உயர்ந்தவர் டைரக்டர் பா. ரஞ்சித். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

    பா.ரஞ்சித்
    பா.ரஞ்சித்

    இந்த நிலையில் இயக்குனர் ரஞ்சித் இந்தியில் திரைப்படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்திற்கு 'பிர்சா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    பிர்சா முண்டா 19-ம் நூற்றாண்டில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆங்கிலேயர்களிடமும் உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த, பழங்குடி மக்களுக்காகப் போராடியவர். இந்த படத்தை நமா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஷரீன் மந்திரி, கிஷோர் அரோரா ஆகியோர் தயாரிக்கின்றனர். 
    Next Story
    ×