என் மலர்

  நீங்கள் தேடியது "PaRanjith"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.இரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
  • தற்போது புதிய படத்தின் படப்பிடிப்பை பா.இரஞ்சித் தொடங்கியுள்ளார்.

  'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது காளிதாஸ் ஜெயராம், அசோக் செல்வன், துஷரா விஜயன் ஆகியோர் நடிப்பில் 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை ரஞ்சித் இயக்கி முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் 'சியான் 61' படத்தை இயக்குகிறார்.

   

  இதனிடையே பரியேறும் பெருமாள், குண்டு, ரைட்டர், குதிரைவால், சார்பட்டா பரம்பரை, சேத்துமான் உள்ளிட்ட படங்களை நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். தற்போது பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் லெமன் லீப் கிரியேசன்ஸ் கணேசமூர்த்தி இணைந்து தயாரிக்கின்றனர்.

   

  இந்த படத்தில் அசோக்செல்வன், சாந்தனு பாக்யராஜ், ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்திபாண்டியன், திவ்யா துரைசாமி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ஓ2, தம்மம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தமிழழகன் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தமிழ்பிரபா மற்றும் ஜெய்குமார் எழுதுகின்றனர். மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரஜினியின் காலா படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தியேட்டருக்கு வந்து கொண்டாடி இருக்கிறார்கள். #Kaala #Rajini #Rajinikanth
  ரஜினி நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் படம் ‘காலா’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். 

  இப்படத்தில் ரஜினி படம் முழுக்க கருப்பு வேட்டி, கருப்பு சட்டை அணிந்தே வருகிறார். மும்பை தாதாவான அவரது இந்த தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் ரஜினியின் காலா தோற்றத்திலேயே தியேட்டர்களுக்கு வந்திருந்தனர்.  கருப்பு சட்டை, கருப்பு வேட்டி அணிந்து தியேட்டர்களில் அவர்கள் தெறிக்க விட்டனர். இதனால் தியேட்டர்களில் திரும்பிய திசையெல்லாம் கருப்பு வண்ணமாகவே காணப்பட்டது. இப்படி காலா உடையில் வந்த ரசிகர்கள் பலர் தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்டிருந்த ‘‘காலா ரஜினி’’ கட்அவுட்டுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரசிகர்களின் உற்சாகத்தை பார்க்க சென்ற இயக்குனர் பா.ரஞ்சித், ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்க வில்லை என்று கூறியிருக்கிறார். #Kaala #Ranjith #Rajini
  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் உலகமெங்கும் இன்று ரிலீசாகி இருக்கிறது. பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்திருக்கிறார். காலா படத்தை தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

  காலா திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள திரையங்குகளில் இன்று அதிகாலை வெளியானது. திரையரங்குகளுக்கு முன்பிருந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும், நடனமாடியும் கொண்டாடினர். ரசிகர்களின் உற்சாகத்தை இயக்குனர் பா.ரஞ்சித் திரையரங்குக்கு சென்றிருக்கிறார்.

  ரசிகர்களின் உற்சாகத்தில் திகைத்துப் போன இயக்குனர் ரஞ்சித், இப்படம் குறித்து கூறும்போது, ‘காலா படத்துக்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ரஜினியின் அரசியலுக்காக காலாவை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக எடுக்கப்பட்ட படம். கர்நாடகாவில் ஒரு சில இடங்களில் காலா திரைப்படம் வெளியாகவில்லை. இது வருத்தம் அளிக்கிறது’ என்றார்.
  ×