இயக்குநர் பா. ரஞ்சித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன்

கடைசியாக விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை பா. ரஞ்சித் இயக்கினார் வேட்டுவம் படத்தில் கெத்து தினேஷ், ஆர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இயக்குநர் பா. ரஞ்சித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட விசிக தலைவர் திருமாவளவன்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் முக்கியமானவர் பா. ரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஓங்கி பேசுவதும், சமூதாயத்தில் அவர்கள் படும் பிரச்சனைகள் சார்ந்த கதைகளை திரைப்படமாக கொடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த படங்களை இயக்குவது மட்டுமல்லாமல், நீலம் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல நல்ல படங்களை தயாரித்தும் வருகிறார்.

இவர் கடைசியாக சீயான் விக்ரம் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் வேட்டுவம் படக்குழுவினரை சந்தித்தது விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com