மீண்டும் அட்டக்கத்தி தினேஷுடன் இணைந்த பா.இரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது பா.இரஞ்சித் சார்பில் புதிய படத்தின் அறிப்பு வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் - தினேஷ்
பா.இரஞ்சித் - தினேஷ்
Published on

2012-ம் ஆண்டு அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். அதன்பின்னர் கார்த்தி நடிப்பில் மெட்ராஸ், ரஜினி நடிப்பில் கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து சர்பட்ட பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படக்குழு

இதனிடையே நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், சேத்துமான், பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார்.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

அட்டக்கத்தி தினேஷ் நடித்திருந்த இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை அதியன் ஆதிரை இயக்கியிருந்தார். தற்போது பா.இரஞ்சித் மீண்டும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு பிரதிப் கலிராஜா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையை ஜஸ்டீன் பிரபாகரன் கவனிக்கிறார்.

தண்டகாரண்யம்
தண்டகாரண்யம்

தண்டகாரண்யம்

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு தண்டகாரண்யம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com