என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித்தின் ‘வலிமை’ பட பாடலுக்காக இணைந்த ‘மாஸ்டர்’ கூட்டணி
Byமாலை மலர்2 Aug 2021 8:07 AM GMT (Updated: 2 Aug 2021 9:11 AM GMT)
விஜய்யின் மாஸ்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய பிரபலங்கள் தற்போது அஜித்தின் வலிமை படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதல் பாடல் இன்று இரவு வெளியிடப்பட உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அனிருத் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பாடலுக்கு ‘வேற மாரி’ என பெயரிடப்பட்டு உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இதன் பாடல் வரிகளை எழுதி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலிமை பாடல் பதிவில் ஈடுபட்டுள்ள விக்னேஷ் சிவன், யுவன்
யுவன் சங்கர் ராஜா - அனிருத் - விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இதற்கு முன்னர் விஜய்யின் மாஸ்டர் படத்துக்காக இணைந்து பணியாற்றினர். அப்படத்தில் இடம்பெற்ற ‘அந்த கண்ண பாத்தாக்கா’ எனும் பாடல் இவர்கள் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அதே கூட்டணி, வலிமை படத்துக்காக மீண்டும் இணைந்துள்ளதால், ‘வேற மாரி’ பாடல் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
Next Story
×