என் மலர்
நீங்கள் தேடியது "Valimai"
- 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வலிமை, பீஸ்ட், விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் வெளியானது.
- இந்த படங்களில் முதல் நாள் அதிகபடியாக வசூல் செய்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கான வருகையை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து திரையரங்குகளில் கொண்டாடுவர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், சூர்யா என நடிகர்களின் படங்களை முதல் நாள் திரையரங்குகளில் விழாக்கோலம் போல மேளம் அடித்து பட்டாசு வெடித்து பாலபிஷேகம் செய்து கொண்டாடி தீர்ப்பார்கள். அதன்படி இந்த வருடம் திரையரங்கில் அஜித்தின் வலிமை படமும், விஜய்யின் பீஸ்ட் படமும், கமல் விஜய் சேதுபதியின் விக்ரம் படமும், திரைப்பிரபலங்கள் பலரும் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளியானது.
இந்நிலையில் 2022ல் திரையரங்குகளில் வெளியாகி தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் செய்த படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பீஸ்ட் படம் ரூ.39 கோடியும், வலிமை படம் ரூ.28 கோடியும், பொன்னியின் செல்வன் ரூ.26 கோடியும், விக்ரம் திரைப்படம் ரூ.22 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வெளியான பீஸ்ட் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

