அஜித் பட நடிகை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

நடிகர் அஜித் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பேர்லே மானே.இவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அஜித் பட நடிகை வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை
Published on

தொகுப்பாளர், நடிகை, யூ டியூபர் என பன்முகத்தன்மை கொண்டவர் மலையாள நடிகை பேர்லே மானே. ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த பேர்லே மானே பின்னர் 'நீலகாஷம் பச்சகடல் சுவன்ன பூமி', 'தி லாஸ்ட் சப்பர்', 'டபிள் பேரல்', 'பிரீத்தம்' போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பேர்லே மானே இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'வலிமை' திரைப்படத்தில் கிறிஸ்டீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் அறியப்பட்டார்.

இந்நிலையில், நடிகை பேர்லே மானே வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதாவது , கேரளாவில் பிரபல யூ டியூபர்கள் வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் யூ டியூபர்கள் வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக நடிகை பேர்லே மானே வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன. மாலைவரை தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com