என் மலர்
சினிமா

அதிகாலையில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் அஜித்
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. #ViswasamFirstLook #Ajith
அஜித் தற்போது `விஸ்வாசம்' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த மாத இறுதிக்குள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நாளா அதிகாலை 3.40 மணியளவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி தினத்தில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Viswasam #AjithKumar
Next Story