என் மலர்

  சினிமா

  சாமி-2 படத்தில் புதிய பரிணாமத்தில் பாபி சிம்ஹா
  X

  சாமி-2 படத்தில் புதிய பரிணாமத்தில் பாபி சிம்ஹா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் சாமி-2 படத்தில் விக்ரமுக்கு வில்லனாக நடிக்கும் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் காட்டவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SaamySquare
  நடிகர் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் ஹரி இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் `சாமி ஸ்கொயர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

  இதில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளத நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் அப்பா, மகன் என இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். சாமி படத்தில் வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவ்வின் மகனாக, பாபி சிம்ஹா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இதில் பாபி சிம்ஹாவை முற்றிலும் மாறுபட்ட புதிய பரிணாமத்தில் ஹரி காட்டவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   சமீபத்தில் வெளியான பாபி சிம்ஹாவின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே சாமி-2 படத்தில் ஒரு மாஸ் விருந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்னு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். #SaamySquare 

  Next Story
  ×