என் மலர்

  சினிமா

  சமூக வலைத்தள விமர்சனங்கள் - காஜல் அகர்வாலின் புதிய யோசனை
  X

  சமூக வலைத்தள விமர்சனங்கள் - காஜல் அகர்வாலின் புதிய யோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர்-நடிகைகள் ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
  காஜல் அகர்வால் கடந்த வருடம் விஜய்யுடன் மெர்சல், அஜித்குமாருடன் விவேகம் படங்களில் நடித்து இருந்தார். தற்போது, இந்தியில் வெளியாகி பரபரப்பாக ஓடிய குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்திலும், இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கும் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

  “வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் கனவு இருக்கும். அந்த கனவு நனவாக கடுமையாக உழைக்க வேண்டும். நான் சிறுவயதில் நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன். அதனால் அது நிறைவேறியது. சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியும் எனக்கென்று ஒரு இடம் இங்கு இருக்கிறது என்றால் அதற்கு எனது உழைப்புதான் காரணம்.

  உழைப்பும் முயற்சியும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். சில நேரங்களில் நடிகர்-நடிகைகள் மிகுந்த எதிர்பார்ப்போடு கஷ்டப்பட்டு நடித்த படங்கள் தோல்வி அடைந்து விடும். அதற்கான காரணம் புரியாமல் குழப்பம் வரும். அப்போது யாரும் நிராசை அடையக்கூடாது. அதில் இருந்து மீண்டு வந்தால்தான் மீண்டும் வெற்றி பெற முடியும்.  படங்களின் வெற்றி தோல்வி முடிவுகள் நமது கையில் இல்லை. எனவே படங்கள் தோல்வி அடைந்தால் கவலைப் படக்கூடாது. வெற்றி- தோல்வியை சமமாக எடுத்து முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டும். நாம் செய்கிற தொழில்தான் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். முடிவுகளை தலை விதி முடிவு செய்யும். லட்சியம் இருக்க வேண்டும் அதை நிறைவேற்ற உழைக்க வேண்டும்.

  நமக்கு ஆலோசனைகள் சொல்ல நிறைய பேர் வருவார்கள். நம் மீது இருக்கும் அக்கறையாலும் சிலர் அறிவுரைகள் சொல்லலாம். அவற்றையெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் முடிவு எடுப்பது நாமாகத்தான் இருக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.

  எனவே எவ்வளவு உயரத்துக்கு போனாலும் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இன்னொரு முக்கிய விஷயத்தையும் சொல்கிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை நடிகர்-நடிகைகள் ‘சீரியஸ்’ ஆக எடுத்துக்கொள்ளக் கூடாது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×