என் மலர்

  சினிமா

  தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்
  X

  தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஷ்ணு விஷால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' என பிசியாக நடித்து வரும் விஷ்ணு விஷால் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
  விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக கதாநாயகன் படம் ரிலீசாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஷ்ணு தற்போது `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

  இந்நிலையில், விஷ்ணு அடுத்ததாக நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை விஷ்ணு அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் அடுத்ததாக புதுமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.   விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸின் 4-வது படமாக உருவாகும் இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

  ஏப்ரலில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகவும், இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  Next Story
  ×