search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    விஜய் மிகவும் அமைதியானவர்: நித்யாமேனன்
    X

    விஜய் மிகவும் அமைதியானவர்: நித்யாமேனன்

    விஜய் 61 படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் நித்யாமேனன் விஜய் ரொம்பவும் அமைதியானவர் என்று கூறியுள்ளார்.

    விஜய் நடிக்கும் 61-வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். 3 வேடங்களில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் ஒரு விஜய் ஜோடியாக நித்யாமேனன் நடிக்கிறார். இது பற்றி கேட்டபோது...

    “நடிப்பிலேயே எனக்கு இன்னும் திருப்தி ஏற்படவில்லை. நிறைய வித்தியாசமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் நான் இயக்குனர் ஆகும் ஆசையில் புதுப்படங்களை ஒப்புக்கொள்வது இல்லை என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. எனக்கு இப்போது அது போன்ற எண்ணம் எதுவும் இல்லை.



    விஜய் படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடிக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக விஜய்யுடன் நடித்திருக்கிறேன். விஜய் மிகவும் அமைதியானவர். சிறந்த மனிதர். படப்பிடிப்பு தளத்தில் கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட வி‌ஷயங்களை மட்டுமே பேசுவார். தனது கதாபாத்திரத்தை மட்டுமே சிந்திப்பார். உடன் நடிப்பவர்களையும் அந்த பாத்திரமாகவே கருதுவார். விஜய்யுடன் நடித்தது எனக்கு புதுமையான அனுபவம். இந்த படத்தில் அட்லியுடன் பணிபுரிவது மகிழ்ச்சி. தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்”.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×