என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மும்பை ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினியை காண திரண்ட ரசிகர்கள்
Byமாலை மலர்31 May 2017 4:45 AM GMT (Updated: 31 May 2017 4:46 AM GMT)
மும்பையில் நடந்த ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்தை காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படமான ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அங்குள்ள தெருக்கள், கடைவீதிகள், தாராவி குடிசைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ளது. ரஜினிகாந்த் கருப்பு வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து தாதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்கள் ரஜினிகாந்தை தொடுவதற்கும், பக்கத்தில் நின்று ‘செல்பி’ எடுப்பதற்கும், கைகுலுக்குவதற்கும் முண்டியடித்தனர். இதனால் படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தி ரஜினிகாந்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்துச் சென்றனர். தனியார் பாதுகாவலர்களும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். ஆனாலும் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் ஸ்டைலாக நடிக்கும் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பியபடி இருந்தனர். அவர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்தார்.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் ரஜினிகாந்த் தலையில் ‘குல்லா’ அணிந்து நடந்து செல்வது போன்ற காட்சிகளும் படமானது. அப்போதும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து குரல் எழுப்பியபடி ஓடினார்கள்.
தாதாவாக இருக்கும் ரஜினிகாந்த் வில்லன்களுடன் மோதுவது போன்ற ஆக்ரோஷமான சண்டை காட்சிகளையும் மும்பையில் படமாக்குகின்றனர். மும்பை படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாவது கட்டமாக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.
இதற்காக பூந்தமல்லி பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்து உள்ளனர். நெல்லையில் இருந்து மும்பை சென்று வசித்த ஒரு குடும்பத்தை பற்றிய கதையே இந்த படம் என்று படத்தின் டைரக்டர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். எனவே ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நெல்லை தமிழ் பேசி நடிப்பதாக கூறப்படுகிறது.

Next Story
×