என் மலர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு, ஜி.வி.பிரகாஷ் குமார் போட்டியாக மாறியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் தான் எடுக்கும் படங்களை நேர்த்தியாக மக்கள் விரும்பும்படி கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவரது இயக்கத்தில் வெளியான ஒவ்வொரு படங்களும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்தளவுக்கு படங்களில் நேர்த்தியை கையாள்பவர் பாலா. அவரது இயக்கத்தில் ஒருமுறை நடித்தால் போதும் என்று நடிகர், நடிகர்கள் காத்திருக்கின்றனர்.
பாலா தற்போது, ஜி.வி.பிரகாஷ், ஜோதிகாவை வைத்து ‘நாச்சியார்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஜோதிகா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலாவின் பி ஸ்டுடியோஸ் மற்றும் இயோன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி சரஸ்வதி விடுமுறை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநாளில் தான் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `வேலைக்காரன்' படமும் ரிலீசாகிறது. ‘நாச்சியார்’ படமும் அதே நாளில் ரிலீசானால் இரு படங்களுக்கும் நல்ல போட்டி நிலவும் என்பதில் சந்தேமில்லை.

விஜய் கே.மோகன் இயக்கத்தில் சரிஷ் - அட்சய பிரியா நடிப்பில் உருவாகியுள்ள முரட்டு காதல் கதையான ‘இமை’ படத்தின் முன்னோட்டம்.
ஜே அண்ட் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஹார்பிக் வி.டோரி தயாரித்துள்ள படம் ‘இமை’.
முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. நாயகனாக சரிஷ் அறிமுகமாகிறார். நாயகியாக அட்சய பிரியா நடித்துள்ளார். டிஸ்கோ சாந்தியின் சகோதரர் அருண் திருமொழிவர்மன் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - வி.கே.பிரதீப், இசை - மிக்குகாவில், ஆதிப், பாடல்கள் - யுகபாரதி, நடனம் - தீனா,ஸ்டண்ட் - டேஞ்சர் மணி, ஒப்பனை - மிட்டா ஆண்டனி.
இயக்கம் - விஜய் கே. மோகன். இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘நளசரிதம் நாலாம் திவசம்’ ‘வேனல் மரம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இயக்குநர் விஜய் கே.மோகன், தான் இயக்கும் முதல் படம் பற்றி கூறும் போது.....
‘இமை’ ஒரு முரட்டுத் தனமான காதல் கதை. மிகவும் கரடுமுரடான வாலிபனுக்கும் கனி போன்ற அப்பாவிப் பெண்ணுக்கும் இடையில் மலரும் காதல் பற்றிய கதை.
“திறமைகளுக்கும் புதுமைகளுக்கும் என்றும் தமிழில் வரவேற்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
அந்த தைரியத்தில் தான் தமிழில் படம் இயக்கியுள்ளேன்”.
ஒரு நாள் ரயிலில் கேட்ட ஒருவரது ஆச்சரியமான உண்மைக் கதையையே ‘இமை’ படமாக உருவாக்கியிருக்கிறேன்.” என்றார்.
50-நாட்களில் படத்தை முடித்துள்ளனர். அடுத்த மாதம் ‘இமை’ திரைக்கு வருகிறது.

`அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியஸின் பிரபல நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வசூலைக் குவித்த 'அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதற்கான பணிகளில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இறங்கியிருக்கிறார்.
வருகிற டிசம்பர் 2020-ல் அவதார் படத்தின் அடுத்த பாகமாக 'அவதார் 2' வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், படத்தை ரிலீஸ் செய்வதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

`அவதார்' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் (`அவதார்' உலகம்) தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படுகின்றன. அதற்காக ஆழ்கடலில் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக ஜேம்ஸ் கேமரூன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே அவதார் படத்தில் சாம் வொர்த்திங்டன், ஃஜோ சால்டனா, ஜோயல் டேவிட் மூர், சிகோர்னி வேவர், சிசிஎச் பவுண்டர், ஸ்டீபன் லாங் என பலரும் இருக்கும் நிலையில், சமீபத்தில் `ஃபியர் தி வாக்கிங் டெட்' படத்தில் நடித்த பிரபலம் கிளிஃப் கர்ட்டிஸ்-ம் அவதார் படக்குழுவில் இணைந்திருந்தார். கர்ட்டிஸ், டோனாவோரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மெட்கயினா இனத்தின் தலைவரும் இவர் தான் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரியஸில் நடித்திருந்த ஹாலிவுட் பிரபலம் ஊனா சாப்ளின் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2.8 பில்லியன் டாலர்களை வசூலித்த அவதார், பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்திருந்தது. `டைட்டானிக்' படத்தின் வசூல் சாதனையையும் 'அவதார்' முறியடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவதார் 2 மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

அறிக்கை விடுகிறவர்களை முதலில் விவசாயம் செய்யச் சொல்லுங்க என்று விஷாலை மறைமுகமாக தாக்கி இயக்குநர் சேரன் காட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டி தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகளை போல், தமிழக அரசும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

விஷாலின் இந்த கடிதத்தை இயக்குநரும், நடிகருமான சேரன் மறைமுகமாக சாடியுள்ளார். இதுகுறித்து சேரன், அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
"ஆடு நனைகிறதென ஓநாய்கள் கவலை கொள்ளும். விவசாயிகள் பாவமென விவரமில்லாதோர் அறிக்கை விடுவார்கள் அவர்களை முதலில் தமிழ்நாட்டில் விவசாயம் செய்யச் சொல்லுங்க"
என்று நடிகர் விஷாலை இயக்குநர் சேரன் மறைமுகமாக தாக்கி குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து ஒரு கருத்து போரும் டுவிட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் - அமலாபால் - கஜோல் இணைந்து நடித்திருக்கும் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலாபால் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகிய படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இப்படத்தின் 2-வது பாகம் தற்போது தயாராகி உள்ளது.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில், தனுஷ் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு நடிகர் தனுஷ் கதை, வசனம் எழுதியிருக்கிறார் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் ரிலீஸ் குறித்த தேதியை தனஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

அதன்படி இசையும், டிரெய்லரும் வருகிற ஜுன் 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெளியாக இருக்கிறது. எனவே வருகிற 25-ஆம் தேதி தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கும் சிறப்பு விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், அமலாபால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

தனது இசை வாழ்வு அனுபவங்கள் குறித்து, இளையராஜா கூறியதாவது:-
"சென்னை கமலா தியேட்டரில் `கிழக்கே போகும் ரெயில்' படத்தின் வெற்றி விழா. விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கலந்துகொண்டு எங்கள் எல்லாருக்கும் பரிசு வழங்கினார்.
அவர் பேசும்போது, படத்தில் இடம் பெற்ற ``மாஞ்சோலைக் கிளிதானோ'' என்ற பாடலை வாய்விட்டுப் பாடி, ``அடடா! என்ன பாடல்! என்ன பாடல்!'' என்று புகழ்ந்து பேசினார். நடிகர் திலகத்திடம் இருந்து கிடைத்த இந்தப் பாராட்டு, எங்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
சிவாஜி பேசும்போது, பாரதிராஜாவை வானளாவ உயர்த்திப்பேசினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்தவர்களில் ஒருவராக, பாரதிராஜாவின் அம்மாவும் அமர்ந்து, அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விழா முடிந்ததும், தனது தாயாரை சந்தித்த பாரதிராஜா, ``எப்படி இருந்தது?'' என்று கேட்க, அந்தத் தாயாரோ சர்வ சாதாரணமாக, ``அது என்னமோப்பா! அவங்க என்னென்னமோ பேசுறாங்க! ஆனா என் காதுல பாரதிராசா, பாரதிராசாங்கற உன் பேர் மட்டும்தான் கேட்டுதுப்பா'' என்று சொன்னார்.
உயர்ந்த தாயுள்ளத்தின் உணர்வுக்கு எடுத்துக்காட்டாகத்தான் என்னால் இதை உணர முடிந்தது.
இதற்கிடையில் தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் ஆபீசிற்கு ஒருநாள் போய் வரலாம் என்று போனேன். அப்போது ராஜ்கண்ணுவுடன் சிலர் இருந்தனர். என்னைப் பார்த்ததும், ``படத்தின் பாடல்கள் சரியில்லை. பதினாறு வயதினிலே படப்பாடல்கள் மாதிரி அமைந்திருந்தால் படம் இன்னும் நன்றாகப் போகும்'' என்றார்கள்.
என் முகத்திற்கு எதிரேயே அவர்கள் இப்படிச் சொன்னதில், எனக்கு வருத்தமாகி விட்டது. எல்லா படப் பாட்டுக்களும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டுமா? என்ன இவர்களின் பேச்சு? ஒரு அடிப்படை கலை உணர்வு கூடவா இல்லாமல் இருப்பார்கள்? மனம் வருந்தினேன். அந்த மாதிரியான வருத்தங்கள், மனதில் வடுவாகத் தங்கி விட்டன.
நடிகர் திலகம் சிவாஜி நடிக்க ``ரிஷிமூலம்'' என்ற படத்தை எஸ்.எஸ்.கருப்பசாமி தயாரித்தார். நான் இசை. மகேந்திரன் வசனம், எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்.
எஸ்.எஸ்.கருப்பசாமி அப்போது அருப்புக்கோட்டை தொகுதியில் எம்.எல்.ஏ. வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மிகவும் கண்டிப்பானவர். கண்ணியமானவரும் கூட.
பாடல்கள் கம்போசிங்கிற்கு டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன், தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கருப்பசாமி ஆகியோருடன் மகாபலிபுரம் போனேன். அங்குள்ள தமிழ்நாடு தங்கும் விடுதியில் தங்கினோம்.
மூன்று நாட்கள் தொடர்ந்து கம்போசிங் நடந்தது. ``நேரமிது'' என்ற பாடலுக்கான சூழ்நிலை புதிது. சிவாஜி - கே.ஆர்.விஜயா பாடுவதாக வரும் இந்த டூயட் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? அவர்கள் பெட்ரூமில்! அதுவும் குழந்தை அருகில் படுத்திருக்கும்போது!
அதாவது தூங்கும் குழந்தை விழித்து விடாதபடி, மிக மெல்லியதாக அவர்களின் டூயட் அமைய வேண்டும். டிïன் அமைத்து, பாடிக்காட்டினேன். எல்லாருக்கும் பிடித்திருந்தது.
இந்த டிïனை நான் கம்போஸ் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.
அந்த மாலை நேரத்தில் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்திருந்த தம்பதியரில் பெண் மட்டும் எங்கள் அறையை கடந்து போயிருக்கிறார். பாடலைக் கேட்டவர் அப்படியே நின்று விட்டார். பிறகு ``நான் உள்ளே வரலாமா?'' என்று வெளியில் இருந்தவாறே சைகை மூலம் கேட்டார். ``ப்ளீஸ் கம் இன்'' என்று டைரக்டர் சொல்ல, உள்ளே வந்தார்.
நாங்களெல்லாம் கீழே தரையில் விரிப்பை விரித்து அமர்ந்திருந்தோம். எங்களோடு அவரும் கீழே உட்கார்ந்தார். என் முகம் பார்த்தவர், ``நீங்கள் பாடிய பாடலை மறுபடியும் ஒருமுறை பாட முடியுமா?'' என்று கேட்டார்.
``ஓ'' என்றேன். மெதுவாக பாடவும் செய்தேன்.
அந்தப் பெண்ணின் கண்களில் இருந்து `பொலபொல' வென்று கண்ணீர் கொட்டியது.
பாடல் முடிந்ததும் எல்லாரும் அமைதியானோம்.
இப்போது அந்தப் பெண்மணி பேசினார். "இந்த இசைக்கும் எனக்கும் பல ஜென்மங்களாக தொடர்பு இருப்பது போல் உணர்கிறேன்'' என்றார். அதோடு, ``இந்த இசையை எனக்காக எழுதித்தர முடியுமா?'' என்று கேட்டவர், தனக்கு பியானோ வாசிக்கத் தெரியும் என்றும்
சொன்னார்.என்னிடம் மிïசிக் எழுதும் பேப்பர் இல்லை. எனவே என் லெட்டர்பேடில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அதில், கோடுகள் போட்டு அந்த இசையை பியோனோவில் வாசிப்பதற்கு தகுந்தாற்போல் எழுதிக் கொடுத்தேன்.
வாங்கிக் கொண்ட அந்தப் பெண் நன்றி ததும்ப, ``இந்த இசையை வாங்குவதற்குத்தான் இந்த சுற்றுலா நடந்ததோ என்னவோ?'' என்று சொல்லியபடி விடை பெற்றுச் சென்றார்.
இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டபோது, இன்னொரு சம்பவம்.
டி.எம்.சவுந்தர்ராஜனும், பி.சுசிலாவும் பாடிக் கொண்டிருந்தார்கள். ``மேகத்திலே வெள்ளி நிலா, காதலிலே பிள்ளை நிலா'' என்ற சரணம் போய்க் கொண்டிருந்தது.
அப்போது எஸ்.பி.முத்துராமன் என்னை அழைத்தார். ``ராஜா சார்! நீங்கள் கம்போசிங்கில் வெறும் ஆர்மோனியத்துடன் பாடும்போது காதருகில் மிகவும் மெல்லிய குரலில் பாடுவது போல இருந்ததே! இப்போது இவர்கள் பாடும்போது பலமான குரலில் வருவது போலல்லவா இருக்கிறது'' என்றார்.
மகேந்திரனோ அவர் பங்குக்கு, ``ராஜா! இவ்வளவு சத்தமாக பாட்டைக் கேட்டால், கட்டிலில் தூங்கும் பையன் எழுந்து விடமாட்டானா?'' என்றார்.
நான் டி.எம்.எஸ். - சுசிலா பாடிக் கொண்டிருந்த அறைக்குப் போனேன்.
டி.எம்.எஸ்.சிடம், ``அண்ணா! குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும்போது கணவனும், மனைவியும் பாடும் ரொமாண்டிக் பாடல் இது. மெதுவாகக் கேட்க வேண்டும். இதுவோ பெரிய மலைச்சாரலில் நின்று கொண்டு ``மேகத்திலே வெள்ளி நிலா'' என்று பாடுவது போல் வருகிறது. உங்களுக்கு தெரியாததல்ல. மெதுவாகப் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.
அவர், ``ராஜா! நான் மெதுவாகத்தான் பாடுகிறேன். இப்போ கேளு''என்றவர் பாடினார். மிகவும் சன்னமாக குரல் ஒலிக்க, மெதுவாகத்தான் கேட்டது.
``பிறகு எப்படி ரிக்கார்டிங்கில் அவ்வளவு பெரிய சத்தமாக கேட்கிறது?'' என்று கேட்டேன்.
``நான் என்னப்பா பண்றது? என் குரல் அமைப்பு அப்படி! நேரில் கேட்டால் மென்மையாகவும் மைக்கில் கேட்டால் கம்பீரமாகவும் ஒலிக்கிற குரலாக ஆண்டவன் கொடுத்து விட்டான்'' என்றார், டி.எம்.எஸ்.
உள்ளே போய் இருவருடைய குரலையும் குறைத்து பாடலைப் பதிவு செய்தோம்.
ஆனாலும், அது ஒருவருக்கொருவர் காதில் ரகசியமாக பாடுகிற மாதிரி வரவில்லை.
மகேந்திரன் கதை வசனம் எழுதிய படங்கள் எல்லாம் நன்றாக ஓடியதால் அவருக்கு டைரக்டு செய்யும் வாய்ப்பு வந்தது. ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அப்படியொரு வாய்ப்பை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து வார இதழ் ஒன்றில் தொடர் கதையாக வந்திருந்த ``முள்ளும் மலரும்'' கதையை படமாக்க மகேந்திரன் முடிவு செய்தார். திரைக்கதை அமைத்து டைரக்ட் செய்யும் ஏற்பாடுகளை தொடர்ந்தார்.
ரஜினி, ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு என நட்சத்திரங்கள் முடிவானார்கள்.
கம்போசிங் நடந்தது. அப்போது ``16 வயதினிலே'' படத்தைப் பற்றியும், பாரதிராஜாவின் திறமையைப் பற்றியும் மட்டுமே மகேந்திரன் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருந்தார். அதே நேரம், ``தரத்தில் உயர்ந்த நல்ல படமாக இதைக் கொண்டு வந்து விட வேண்டும்'' என்றும் சொன்னார்.
``செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்'', ``அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை'', ``ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...'' ``நித்தம் நித்தம் நெல்லுச் சோறு'' போன்ற பாடல்கள் உருவாயின. பாலு மகேந்திராதான் கேமரா. மகேந்திரனும், பாலு மகேந்திராவும் நல்ல நண்பர்கள்.
ரஜினியின் நல்ல நடிப்பு, படத்தின் இயக்கம், கேமரா, கதை, திரைக்கதை எல்லாம் கச்சிதமாக அமைந்து படத்துக்கு வெற்றியை தேடித்தந்தன.
ஒரு படத்தின் வெற்றிக்காகவே ஒட்டுமொத்த ïனிட்டும் உழைத்தாலும், வெற்றியைத் தருவது நமக்கும் மேலே உள்ள ஒருசக்தி.
இதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் நடந்தது. நானும் மகேந்திரனும், சேலத்தில் ``முள்ளும் மலரும்'' ஓடிய ஒரு தியேட்டருக்கு போன போது அது நடந்தது.
தியேட்டர் முதலாளி எங்களை வரவேற்று அழைத்துச் சென்று படம் பார்க்க வைத்தார்.
படத்தின் ஆறாவது ரீலில், ரஜினி மீது லாரி ஏறியது போல் ஒரு சீன் வரும். அங்கே இடைவேளை என்று போட்டு விட்டார்கள். எனக்கு அதிர்ச்சி. நான் பார்த்தவரை படத்தின் இடைவேளை அது இல்லை.என்னைவிட மகேந்திரன் இன்னும் அதிர்ச்சியாகி இருந்தார்.

டெஸ்பிகபில் மீ அனிமேஷன் பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்திருக்கும் ‘டெஸ்பிகபில் மீ 3’ படத்தின் விமர்சனம்
பிராட் சிறுவயதிலிருந்து டிவி சீரியல்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனால், இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவருடைய உருவத்தில் பொம்மைகள் எல்லாம் வெளியாகி அனைவர் மத்தியிலும் பிரபலமாகிவிடுகிறார். ஒருகட்டத்தில் இவருடைய சீரியல் நிறுத்தப்பட இவரது மார்க்கெட் சட்டென்று சறுக்குகிறது.
இதனால், விரக்தியடையும் பிராட் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகிறார். ஒருமுறை கப்பலில் இருக்கும் வைரத்தை திருடுவதற்கு பிராட் செல்கிறார். அதை கண்டுபிடித்து அவரை பிடிக்கும் முயற்சியில் உளவுத்துறை ஏஜென்டான க்ரூவும் அவரது மனைவியும் செல்கிறார்கள். சென்ற இடத்தில் வைரத்தை அவனிடமிருந்து மீட்டுவிடுகிறார்கள். ஆனால், பிராட் இவர்களிடமிருந்து தப்பித்து விடுகிறார்.

இதனால் க்ருவையும் அவரது மனைவியையும் உளவுத்துறை ஏஜென்ட் பதவியிலிருந்து அவரை தூக்குகிறார்கள். இந்நிலையில், க்ரூ இரட்டை பிறவி என்றும், அவருக்கு ஒரு சகோதரர் இருப்பதும் தெரிய வருகிறது. எனவே, தனது சகோதரரை தேடி புறப்படுகிறார் க்ரூ.
பெரிய செல்வந்தரான க்ரூவின் சகோதரர், ஏகப்பட்ட செல்வங்கள் இருந்தும் தன்னுடைய அப்பாவைப் போல் பெரிய வில்லனாக ஆகமுடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்கிறார். இதனால், ஏற்கெனவே வில்லனாக இருந்து மிகப்பெரிய சாகசங்கள் செய்த க்ரூவிடம் தானும் அதேபோல் வில்லனாக ஆகவேண்டுமென்று உதவி கேட்கிறார்.

ஆரம்பத்தில் மறுக்கும் க்ரூ, ஒருகட்டத்தில் தனது சகோதரனின் ஆசையை நிறைவேற்ற முன்வருகிறார். இதற்குள், க்ரூவால் கைப்பற்றப்பட்ட வைரத்தை பிராட் மறுபடியும் திருடி சென்றுவிடுகிறார். இதை அறிந்த க்ரூ, அந்த வைரத்தை திருடி, தனது சகோதரனை வில்லனாக்குவதற்காக பயிற்சி கொடுக்க முடிவெடுக்கிறார். இதற்காக பல திட்டங்கள் போட்டு அந்த வைரத்தை இரண்டு பேரும் சேர்ந்து திருட முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில், அந்த வைரம் இவர்கள் கைக்கு கிடைத்ததா? தன்னைப் போலவே தனது தம்பியையும் பெரிய வில்லனாக க்ரூ மாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
டெஸ்பிகபில் மீ பட வரிசையில் மூன்றாவது பாகமாக வெளிவந்துள்ள படம்தான். முந்தைய பாகங்களைப்போலவே இந்த பாகமும் ரொம்பவும் கலகலப்பாக செல்கிறது. முக்கியமாக பிராட் கப்பலில் வைரத்தை திருடச் செல்லும்போது அவர் செய்யும் சேஷ்டைகள் எல்லாம் ரொம்பவும் கலகலப்பாக இருக்கிறது.

அதேபோல், இந்த பாகத்தில் க்ரூவின் சகோதரர் செய்யும் குறும்புகளும் ரசிக்க வைக்கிறது. இவர் சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாக இருக்கிறது. மின்னியன்ஸ்களுக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக வேலை இல்லாவிட்டாலும் பிற்பாதிக்கு பிறகு அவைகளின் சேட்டைகள் எல்லாம் கலகலப்பூட்டியிருக்கின்றன.
படம் முழுவதும் காமெடி மழை பொழிந்திருந்தாலும் ஆங்காங்கே செண்டிமெண்ட் காட்சிகளும் இருக்கிறது. அவை கதை ஓட்டத்திற்கு எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை. எல்லா கதாபாத்திரங்களையும் ரொம்பவும் நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ‘டெஸ்பிகபில் மீ 3’ நகைச்சுவை விருந்து.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான நடிகர் விஷால் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புரட்சி தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். நமது அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசத்திலும், மகாராஷ்டிராவிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநில அரசும் கடன்களை ரத்து செய்துள்ளது.

நமது அண்டை மாநிலங்கள் செய்ததை போல தாங்களும் நமது தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வறுமையை போக்கும் விதத்தில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு நடித்துவரும் ‘ஸ்பைடர்’ படத்தின் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வரும் படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஐந்தரை நிமிட காட்சி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து உடனே தகவலறிந்த படக்குழுவினர் உடனடியாக சைபர் கிரைம் போலீசின் உதவியை நாடி, அந்த காட்சிகளை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு இன்னும் முடியாத பட்சத்தில் ஐந்தரை நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. விரைவில், இப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதர்வா நடிக்கும் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் ஆடியோ வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
அதர்வா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இப்படத்தை ஓடம் இளவரசு என்பவர் இயக்கி வருகிறார். அதர்வாவுக்கு ஜோடியாக ரெஜினா கஸாண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு நாயகிகள் நடித்துள்ளனர். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வருகிற ஜுன் 23-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இப்படத்தின் ஆடியோ விழாவை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளனர். இந்த விழாவில் படத்தில் நடித்துள்ள அனைத்து நட்சத்திரங்களும் கலந்துகொள்ள உள்ளனர். இந்த படம் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு வெள்ளிவிழா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இதில் முதல் பாகம் ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாகிறது. இரண்டாவது பாகம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீசாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்ட நடித்திருக்கின்றனர்.

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் இன்னமும் ரிலீசாகவில்லை. இரு நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில், டிரெய்லர் ரிலீசாகுமா என ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் டிரெண்ட் பாடல், ரோட்டுல வண்டி ஓடுது, ரத்தம் என் ரத்தம் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 450 திரைகளில் படம் ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக உடல் எடையை அதிகரித்த அனுஷ்கா இன்னமும் எடையை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார். எனவே சில நாட்களில் படங்களில் நடிப்பதில்லை என்றும் அவர் முடிவு செய்திருக்கிறார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை அதிகரித்தார். அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா என்று பல்வேறு முயற்சிகள் செய்தார். நீண்ட தூரம் ஓடியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அவருடைய உடல் எடை எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அவரால் பழைய வடிவத்தை தொட முடியவில்லை.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் நடித்த அனுஷ்காவுக்கு ‘பாகுபலி-2’-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேடம். எனவே முதல் பாகத்தில் இருந்தது போல அனுஷ்கா உடல் மெலிய வேண்டும் என்று ராஜமவுலி விரும்பினார். இதற்காக அனுஷ்கா தொடர்பான காட்சிகளை கடைசியில் படமாக்கினார். அதற்குள் உடல் எடையை குறைக்க அவகாசம் அளித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனவே கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க பல கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

உடல் எடை அதிகமான அனுஷ்காவை ‘குண்டு ஆன்டி’ என்று ரசிகர்கள் கேலி செய்தனர். உணவு கட்டுப்பாடு, ஜிம்மில் உடற்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தார், பயன்இல்லை. எனவே, யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையை குறைக்க அனுஷ்கா முடிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் யோகா, உடற்பயிற்சியில் நீண்டநேரம் பங்கேற்க முடியவில்லை. எனவே, நடிப்புக்கு தற்காலிகமாக சிறிய விடுமுறை விடமுடிவு செய்துள்ளார். இதில் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிடலாம் என்று நம்புகிறார்.
அனுஷ்கா தற்போது ‘பாக்மதி’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதன்பிறகு வேறு படங்களை ஏற்கவில்லை. உடல் குறைப்பு பயிற்சி மற்றும் யோகாசனத்துக்காக முழு நேரம் ஒதுக்க நடிப்புக்கு சிறிய இடைவெளிவிட திட்டமிட்டுள்ளார்.