search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாரிஸ் ஜெயராஜ்"

    • முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ்.
    • இவரது இசை நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரின் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடிதம் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை காவல் துறையினர் பல்வேறு நிபந்தனைகள் விதித்து நிகழ்ச்சி நடந்த அனுமதி வழங்கியுள்ளனர். அதாவது அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட டிக்கெட்டுகள் விற்கக்கூடாது எனவும் டிக்கெட் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.


    20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இந்த மைதானத்தில் இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 5 ஆயிரம் எண்ணிக்கையில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை முறையாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்து தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

    இதற்கு முன்பு ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு சர்ச்சையான நிலையில் அதுபோன்று எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என காவல்துறையினர் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 2010-ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார்.
    • இதற்கு ரூ.11,50,000 செலுத்தப்பட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்.

    பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடந்த 2010-ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி சொகுசு காரை இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் இயக்குவதற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்த போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்தக் கோரி கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து ஹாரிஸ் ஜெயராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நுழைவு வரியும் அபராதமும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ரூ.11,50,952 நுழைவு வரி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது.

    இந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் 2012-ம் ஆண்டு இந்த காரை விற்று விட்டதாகவும் அதற்கு ஏற்கனவே நுழைவு வழியாக ரூ.11,50,000 செலுத்தப்பட்டு விட்டதாகவும் அந்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்.

    நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சில வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் தனக்கு அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்று தனக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நுழைவு வரி செலுத்தி விட்ட நிலையில், தனக்கு மட்டும் அபராதமும் விதித்தது அரசியல் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது என்றும் அபராதம் செலுத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அபராதத்திற்கு இடைக்கால தடைவிதித்து இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

    ×