தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் போஸ்ட்களில் கமென்ட் டைப் செய்ய வேண்டாம் - புதிய வசதி சோதனை

Published On 2018-11-22 09:46 GMT   |   Update On 2018-11-22 09:46 GMT
ஃபேஸ்புக் வலைதளத்தில் நீங்கள் கடந்து வரும் போஸ்ட்களுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. #Facebook



ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து வரும் பதிவுகளுக்கு தானாக கமென்ட்களை பரிந்துரை செய்யும் புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது.

புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தளத்தில் நீங்கள் கடந்து போகும் போஸ்ட்களுக்கு ஃபேஸ்புக் சார்பில் கமென்ட்கள் பரிந்துரை செய்யப்படும். குறிப்பிட்ட போஸ்ட்களின் அர்த்தத்தை தானாக புரிந்து கொள்ளும் ஃபேஸ்புக் மென்பொருள் அதற்கு பொதுவான கமென்ட்களை பரிந்துரை செய்யும், பின் அதனை பதிவிட நீங்கள் ஒற்றை கிளிக் செய்தாலே போதுமானது.

தற்சமயம் சோதனை செய்யப்படும் இந்த அம்சம் கூகுளின் ஜிமெயில் சேவையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரிப்ளை அம்சத்தை போன்றதாகும், எனினும் ஃபேஸ்புக்கில் சோதனை செய்யப்படும் புதிய வசதி போஸ்ட்களை தானாக புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ற கமென்ட்களை பரிந்துரை செய்யும்.



நேரலை வீடியோக்களில் பயனர்கள் கண்டறிந்த புதிய அம்சம் வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் ஃபேஸ்புக் பரிந்துரை செய்திருக்கும் கமென்ட்கள் சிறியதாக இருந்தாலும், அவை சீராக வேலை செய்வதாகவே தெரிகிறது.

புதிய வசதியின் மூலம் ஃபேஸ்புக் தள பயன்பாட்டை அதிகரிக்க முடியும். எனினும், இந்த போஸ்ட்களில் பிழை ஏற்படுத்தும் டூல்கள் பயன்படுத்தாமல் இருப்பதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்த வேண்டும்.

சமீபத்தில் ஃபேஸ்புக் தளத்தில் யுவர் டைம் ஆன் ஃபேஸ்புக் எனும் அம்சம் வழங்கப்பட்டது. இந்த அம்சம் கொண்டு ஃபேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிட்டிருக்கிறோம் என பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
Tags:    

Similar News