என் மலர்
நீங்கள் தேடியது "Apps"
- செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம்.
- இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறையும்.
வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இது குறித்த புதிய தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் மல்டி-அக்கவுண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது. இதில் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம்பெற்று இருக்கிறது.

முன்னணி தொழில்நுட்ப தளம் என்ற அடிப்படையில், வாட்ஸ்அப் செயலியும் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.
புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறைந்துவிடும், ஆனாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சந்தேகத்தை எழுப்பும்.
இந்த அம்சம் எவ்வாறு இயங்கும், இது தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனில் இருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- புதிய வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார்.
- வீடியோக்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.
புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக செயலியில் சிறியதாக "HD" என்ற ஐகான் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது.

புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார். ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய அம்சத்தை அறிவித்த மார்க் ஜூக்கர்பர்க் இத்துடன் புகைப்படம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதில் HD ஐகான் தெளிவாக இடம்பெற்று இருந்தது.
முன்னதாக இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது. இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் காரணமாக, இனி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 வெர்ஷன்களில் கிடைக்கிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சத்திற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. அதன்படி பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் பல்வேறு அக்கவுன்ட்கள் இடையே ஸ்விட்ச் செய்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். தற்போது பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு இது பயன்தரும் அம்சமாக இருக்கும்.
புதிய அம்சம் மல்டி-அக்கவுன்ட் என்று அழைக்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுன்ட்கள் இடையே மாற்றிக் கொள்ளலாம். இதனால் குளோன் செய்வது போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலையை இனிமேல் நாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் பற்றிய தகவலை Wabetainfo வெளியிட்டு உள்ளது.

அதன்படி இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது. பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு, அவர்களுக்கு அம்சம் வழங்கப்பட்டு இருந்தால், அவர்களால் மற்றொரு அக்கவுன்டை சேர்க்க முடியும். மேலும் அந்த அக்கவுன்ட்-இன் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.
மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு அக்கவுன்ட்-இலும் சொந்த சாட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் செட்டிங்கள் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Photo Courtesy: WaBetaInfo
- வாட்ஸ்அப் செயலியில் 2016 முதல் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- வாட்ஸ்அப்-இன் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது நல்லது. 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மே மாத வாக்கில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்ய துவங்கியது. வின்டோஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது.
- தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.
திருப்பூர்:
லோன் ஆப்களை நம்பி கடன் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
பொதுமக்கள் லோன் ஆப் மூலமாக கடன் வாங்குவது, அதிகரித்து வருகிறது. முழு கடன் தொகையை திருப்பி செலுத்தி முடித்தாலும் அவர்கள் விடுவதில்லை.இன்னும் கடன் தொகை பாக்கி இருப்பதாக கூறி, மிரட்டி வசூல் செய்கின்றனர். வட்டி பணம் தராவிட்டால், உங்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் அக்கவுன்ட் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. உங்க போட்டோக்களை மார்பிங் செய்து, உங்கள் மொபைல் போன் தொடர்பில் உள்ள நபர்களின் வாட்ஸ் அப் எண்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி வருகின்றனர்.
டெலி கிராம் செயலி லிங்க், சினிமா, ஓட்டல் ரிவ்யூ என்ற பெயரிலும், கமிஷன் தருவதாக பெரிய அளவில் மோசடி நடக்கிறது.சமீபத்தில் பிட் காயின் டெபாசிட் முறைகேடு தொடர்பாகவும், புகார் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் ஆன்லைனில் புகார் பதிவு செய்வதில், கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனால் குற்றவாளிகளை வளைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
போலீசார் கூறும்போது, பெரும்பாலான லோன் ஆப்கள் மோசடியானவை. தலை போகும் அவசரம் என்றாலும் அவற்றில் பணம் வாங்க வேண்டாம்.
பணம் வாங்கும் நபர்களின் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற தகவல்களை பெற்று, அதில் முறைகேடு செய்யும் வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றனர்.
- வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
- புதிய க்ரூப் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.
தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

Photo Courtesy WaBetaInfo
வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
- அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.
மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.
இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.
தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.
வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
- திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- திரெட்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
மெட்டா நிறுவனம் டுவிட்டர் தளத்துக்கு போட்டியாக உருவாக்கி இருக்கும் புதிய செயலி தான் திரெட்ஸ். இன்ஸ்டாகிராமை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய திரெட்ஸ் செயலி அறிமுகமானது முதலே அதிகளவு டவுன்லோட்களை கடந்து வருகிறது.
தற்போது திரெட்ஸ் ஆப்-இல் டெக்ஸ்ட் அப்டேட்கள், லைக், ரிப்ளை, ரி-போஸ்ட், ஷேர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், திரெட்ஸ் ஆப்-இல் நேரடி குறுந்தகவல் செய்யும் வசதி இதுவரை வழங்கப்படவில்லை. விரைவில் இந்த நிலை மாறி, இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

கோப்புப் படம்
இன்ஸ்டாகிராம் தலைமை செயல் அதிகாரி ஆடம் மொசெரி, திரெட்ஸ் ஆப்-இல் டைரக்ட் மெசேஜ்களை தற்போதைக்கு வழங்கும் திட்டம் இல்லை என்று முன்னதாக தெரிவித்து இருந்தார். சமூக வலைதள ஆய்வாளரான மேட் நவரா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், விரைவில் திரெட்ஸ் செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கிறது.
அதில், டிரென்ட்ஸ் அன்ட் டாபிக்ஸ் (Trends&Topics), இம்ப்ரூவ்டு சர்ச் (Improved Search) மற்றும் மெசேஜிங் (Messaging) போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கிரியேட்டர்கள் வழங்கும் கருத்துக்களுக்கு ஏற்ப அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், திரெட்ஸ் செயலியில் குறுந்தகவல் அம்சம் வழங்க கோரி ஏராளமான கோரிக்கைகள் எழுந்து இருக்கும் என்று தெரிகிறது. புதிய அம்சங்கள் எப்போது திரெட்ஸ் செயலியில் வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
- தேர்வு செய்யப்பட்ட சிறிய குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளது.
- விளம்பர வருவாய் பங்கீடு திட்ட விண்ணப்ப முறை, இதர விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படுகிறது.
டுவிட்டர் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு விளம்பர தொகையில் ஒரு பங்கு கொடுக்கும் Ad Revenue திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி பயனர்கள் டுவிட் செய்வதற்கு பணம் பெற துவங்கி உள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் பெறுவதற்கு பயனர்கள், தொழில்முறை கிரியேட்டர்கள் டுவிட்டரில் உள்ள விளம்பர வருவாய் பங்கீடு (Ads Revenue Sharing) அல்லது கிரியேட்டர் சந்தா முறை (Creator Subscriptions) திட்டங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயனர்களுக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் புதிய திட்டம், நிதி நிறுவனமான ஸ்டிரைப் பே-அவுட் சப்போர்ட் கொண்ட அனைத்து நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளதாக டுவிட்டர் தெரிவித்து உள்ளது. அதன்படி தற்போதைக்கு இந்திய பயனர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.

பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட் டுவிட்டர் விளம்பர வருவாய் பங்கீடு மூலம் 25 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21 லட்சம் வரை பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பல பயனர்கள் அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரையிலான தொகையை டுவிட்டரிடம் இருந்து வருவாயாக பெற்றுள்ளனர்.
முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட குழுவுக்கு மட்டுமே டுவிட்டர் வருவாய் பங்கீடு திட்டம் பயன்படுக்கு வந்துள்ளதாக அந்நிறுவம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்தில் இணைந்து வருவாய் ஈட்ட, பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இணைந்திருக்கவோ அல்லது வெரிஃபைடு நிறுவனங்களாகவோ இருப்பது அவசியம் ஆகும்.
இத்துடன் கடந்த மூன்று மாதங்களில் குறைந்த பட்சமாக, டுவீட்களுக்கு சுமார் 50 லட்சம் பதிவுகளை (impression) பெற்று இருப்பது அவசியம் ஆகும். இது மட்டுமின்றி டுவிட்டர் நிறுவனத்தின் கிரியேட்டர் மானிடைசேஷன் தரக்கட்டுப்பாடுகளை பயனர்கள் அல்லது கிரியேட்டர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதும் அவசியம் ஆகும்.
விளம்பர வருவாய் பங்கீடு திட்டத்திற்கான விண்ணப்ப முறை மற்றும் விவரங்கள் அடங்கிய வலைதளம் விரைவில் துவங்கப்படும் என்றும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தளத்தில் வருமானம் ஈட்டுவதற்கான புதிய திட்டம் பற்றிய தகவலை கடந்த பிப்ரவரி மாதம் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார். தற்போது டுவிட்டரில் வருவாய் பங்கீடு பெற்றவர்கள், தங்களது வருவாய் விவரங்கள் அடங்கிய ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டு வருகின்றனர்.
- தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
- புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.
இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.
தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.