இனிமேல் போட்டோ, வீடியோக்களை Crop செய்ய வேண்டாம் - இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!

இந்தியாவில் இன்ஸ்டாகிராமை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
இனிமேல் போட்டோ, வீடியோக்களை Crop செய்ய வேண்டாம் - இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட்!
Published on

உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படம், வீடியோவை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டுவந்துள்ளது.

இதன்மூலம் இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com