தொழில்நுட்பம்
கோப்பு படம்

விரைவில் ஆன்ட்ராய்டில் இ-மெயில் ஷெட்யூல் செய்யலாம்

Published On 2018-07-31 06:52 GMT   |   Update On 2018-07-31 06:52 GMT
கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆன்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. #Gmail


ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் மின்னஞ்சல் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

மொபைலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் இணையத்திற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் செயலியின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.

ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் இணைய பதிப்புகளுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் இ-மெயில் அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும்.

ஜிமெயிலின் புதிய செயலியை ஏ.பி.கே. வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். #Gmail #Apps
Tags:    

Similar News