search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்னஞ்சல்"

    • ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக கலைவாணி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய கைப்பேசி எண் 8925811325 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsnregsthanjavur@gmail.com ஆகும்.

    • அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும்
    • மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்தி வரும் நிலையில், அவர்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதற்கான பணிகளை முடிக்கவேண்டும் என்றும், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் துணையேடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மின்னஞ்சல் தேவைப்படுவதால் அரசு பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுத உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் உயர்கல்வி சேர்க்கை தொடர்பான பல்வேறு கடிதங்கள், அறிவுறுத்தல்கள் எல்லாம் மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட இருக்கின்றன. இந்த சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    ×