உலகம்
ரஷிய படைகள்

2 லட்சம் சிறுவர்கள் உட்பட 10 லட்சம் பேரை சிறை பிடித்த ரஷ்யா

Published On 2022-05-03 08:28 GMT   |   Update On 2022-05-03 10:19 GMT
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
கிவ்:

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24ந்தேதி போர் தொடுத்தது. 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷியா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உக்ரைனை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறது. மேலும் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா அங்குள்ள பொதுமக்களை கைது செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை 2 லட்சம் சிறுவர்கள் உள்பட 10 லட்சம் உக்ரைன் நாட்டவர்களை சிறை பிடித்து வந்திருப்பதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ்க் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News