செய்திகள்
துணை அதிபர் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி இந்தியா - கமலா ஹாரிஸ் பெருமிதம்

Published On 2021-09-23 20:28 GMT   |   Update On 2021-09-23 20:28 GMT
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன்னில் அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்தார்.
வாஷிங்டன்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்காவைச் சேர்ந்த 5 உயர் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த கமலா ஹாரிசை இன்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான பங்குதாரர். இந்தியாவில் கொரோனா அதிகரித்ததையடுத்து, இந்தியா அதன் தேவை மற்றும் அதன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பொறுப்பை ஆதரிப்பதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கொரோனா பாதிப்பின்போது, எங்கள் நாடுகள் ஒன்றாக வேலை செய்தன. தொற்று நோயின் ஆரம்பத்தில் இந்தியா மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளின் முக்கிய ஆதாரமாக இருந்தது. பருவநிலை நெருக்கடியை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொள்கிறது என்பது எனக்குத் தெரியும். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படுவதால் நமது மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார். 
Tags:    

Similar News