செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

Published On 2020-09-29 18:54 GMT   |   Update On 2020-09-29 18:54 GMT
கொரோனாவுக்கு பின் நியூயார்க் நகரில் தொடக்க பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
நியூயார்க்:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் பள்ளிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் நியூயார்க் நகரில் தொடக்க பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. இரு முறை தாமதிக்கப்பட்ட நிலையில், இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் நகரில் கொரோனாவை கட்டுப்படுத்திய நிலையில், கடந்த சில நாட்களாக அதன் அண்டை நகரங்களில் தொற்று அதிகரித்து வருவது அதிகாரிகளுக்கு கவலையை அளித்துள்ளது.

அதே நேரத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது குறித்து நியூயார்க் மேயர் பில் டி பிளேசியோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் கூறுகையில், “இது நகரத்துக்கு ஒரு பெரிய தருணம். இந்த வாரம் 5 லட்சம் குழந்தைகள் பள்ளிகளுக்கு வந்து விடுவார்கள்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News