செய்திகள்
சீனா, அமெரிக்கா

ஹாங்காங்குக்கு எதிரான சட்டம்: சீனாவுக்கு, அமெரிக்கா கடும் கண்டனம்

Published On 2020-07-02 04:43 GMT   |   Update On 2020-07-02 04:43 GMT
சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில் சீனா எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.
ஹாங்காங் :

ஹாங்காங்கை தனது சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் சீனா புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது ஹாங்காங்கின் ஜனநாயகத்தை நசுக்கும் செயல் என பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த விவகாரத்தில் சீனா எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியுமான பாம்பியோ கூறுகையில் “ஹாங்காங்குக்கு இது ஒரு துக்கமான நாள். சீனாவின் இந்த நடவடிக்கை ஹாங்காங்கின் ஜனநாயகத்தை அழிக்கிறது. சீனாவின் சர்வாதிகார நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு அமெரிக்கா சும்மா நிற்காது. ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தலின்படி சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேவேளை சுதந்திரத்தை விரும்பும் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும்“ என கூறினார்.
Tags:    

Similar News