செய்திகள்
சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங்

எல்லை பிரச்சினை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா - சீனா சம்மதம்

Published On 2020-06-09 07:31 GMT   |   Update On 2020-06-09 07:31 GMT
எல்லை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியாவும் சீனாவும் சம்மதித்து இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அதிகாரி கூறினார்.
பீஜிங்:

லடாக் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமுமாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருந்ததாகவும், எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.



இந்த நிலையில் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் நேற்று பீஜிங் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

யில் சூழ்நிலை நிலையாகவும் கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கிறது. எல்லையில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண இரு தரப்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சீனாவும் இந்தியாவும் தயாராக உள்ளன.

எல்லை பிரச்சினை தொடர்பாக சமீபத்தில் ராணுவ மற்றும் தூதரக ரீதியில் இரு தரப்புக்கும் இடையே நெருக்கமான தகவல் தொடர்புகள் உள்ளன.

இந்திய பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் முன்பு சந்தித்து பேசிய போது மாறுபட்ட அபிப்பிராயங்கள் சர்ச்சைகளாக மாற அனுமதிக்கக்கூடாது என்பதில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் மோதல் போக்குக்கு தீர்வு காணவேண்டும் என்றும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த பாடுபடுவது என்றும், பிரச்சினைக்கு இரு தரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News