செய்திகள்
சீன அதிபர் ஜின்பிங்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சீனா ரூ.15,200 கோடி உதவி - ஜின்பிங் அறிவிப்பு

Published On 2020-05-19 06:37 GMT   |   Update On 2020-05-19 06:37 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும் என சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
ஜெனீவா:

உலக சுகாதார நிறுவனத்தின் 73-வது கூட்டத்தொடர் நேற்று ஜெனீவாவில் தொடங்கியது. அதில், மற்ற நாட்டு தலைவர்களைப் போல், சீன அதிபர் ஜின்பிங்கும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார நிறுவனத்துக்கு அடுத்த 2 ஆண்டுகளில் சீனா ரூ.15 ஆயிரத்து 200 கோடி அளிக்கும். இது, வளரும் நாடுகளுக்கு பயன்படும்.

கொரோனா பரவல் குறித்த அனைத்து தகவல்களையும் உலக சுகாதார நிறுவனத்துக்கும், மற்ற நாடுகளுக்கும் சீனா உரிய நேரத்தில் அளித்துள்ளது. நோயை கட்டுப்படுத்துவது மற்றும் சிகிச்சை அனுபவங்களை இதர நாடுகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளோம். எனவே, கொரோனா குறித்து பாரபட்சமின்றி ஆய்வு நடத்துவதை சீனாவும் ஆதரிக்கிறது” என்று கூறினார்.
Tags:    

Similar News