செய்திகள்
பாடம் கற்றுக்கொள்ளும் குழந்தை - கோப்புப்படம்

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் பள்ளிகள் திறப்பு - விமான சேவை தொடக்கம்

Published On 2020-05-18 07:14 GMT   |   Update On 2020-05-18 07:14 GMT
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 60 சதவீத விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
பீஜிங்:

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வகுப்புகள் இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கு சென்றால், கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையும் தொடங்கி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததில், 60 சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கிவிட்டன.

இதற்கிடையே, சீனாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tags:    

Similar News