செய்திகள்
அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்திய காட்சி

சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை காப்பாற்றுங்கள் - டிரம்புக்கு போராட்டக்காரர்கள் கோரிக்கை

Published On 2019-09-08 20:00 GMT   |   Update On 2019-09-08 20:00 GMT
ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
ஹாங்காங்:

ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதா ரத்து செய்யப்பட்டபோதும், சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. தொடர்ந்து, 14-வது வாரமாக நேற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் ஹாங்காங் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஹாங்காங் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டு தீர்வுகாண வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர். கைகளில் அமெரிக்க கொடிகளை ஏந்திக்கொண்டு போராடிய அவர்கள் அமெரிக்க தேசிய கீதத்தை பாடினர்.

மேலும் “ஜனாதிபதி டிரம்ப், தயவுசெய்து ஹாங்காங்கை காப்பாற்றுங்கள்” மற்றும் “ஹாங்காங்கை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” என்பவை போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து விடுவிக்க அமெரிக்க உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.

ஹாங்காங் தங்களது உள்நாட்டு விவகாரம் என்றும் அதில் மற்ற நாடுகள் தலையிடக்கூடாது என்றும் சீனா எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News