செய்திகள்
மேயர் ஜேசியல் கொரியா

அமெரிக்காவில்தான் இந்த அநியாயம் - கஞ்சா வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த மேயர்

Published On 2019-09-07 19:45 GMT   |   Update On 2019-09-07 19:45 GMT
அமெரிக்க மேயர் கஞ்சா வியாபாரிகளை மிரட்டி ஆயிரக்கணக்கான டாலரை லஞ்சமாக பெற்றுள்ளார்.
வாஷிங்டன்:

லஞ்சம் வாங்குதல், மிரட்டிப்பணம் பறித்தல் போன்ற அநியாயங்கள், பொருளாதாரத்தில் வளர்ந்து விட்ட அமெரிக்காவிலும் நடக்கத்தான் செய்கிறது. அதற்கு உதாரணமாக நடந்துள்ள சம்பவம் தான் இது.

அங்கு மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பால்ரிவர் நகரத்தின் மேயர் பதவி வகிப்பவர், ஜேசியல் கொரியா.

இவர் அங்குள்ள கஞ்சா வியாபாரிகளை மிரட்டி ஆயிரக்கணக்கான டாலரை லஞ்சமாக பெற்றுள்ளார்.

இது தொடர்பான புகாரின்பேரில் மேயர் ஜேசியல் கொரியாவை அந்த நகர போலீசார் கைது செய்தனர். அவர் மீது மிரட்டி லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவர் இதற்கு முன்பாக ஸ்னோ ஓல் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்து, அதில் முதலீட்டாளர்களை பெருமளவில் ஏமாற்றினார் என்ற புகார் எழுந்தது. இதில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார் என்பது நினைவுகூரத்தக்கது.
Tags:    

Similar News