செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் சி ஜின்பிங்

தைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை

Published On 2019-08-21 17:28 GMT   |   Update On 2019-08-21 17:28 GMT
தைவானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய துணை நிற்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெய்ஜிங்:

சீனா அருகே அமைந்துள்ள தைவான் ஒரு தீவு நாடாக உள்ளது. தைவான் ஒரு காலத்தில் சீனாவின் அங்கமாக இருந்து உள்நாட்டு பிரச்சனை காரணமாக தனி நாடாக மாறியது.

தைவானை தனி நாடாக இதுவரை  ஏற்காத சீனா, இது தங்கள் நாட்டின் ஒரு பகுதி. அதை மீண்டும் இணைப்போம் என்று கூறி வருகிறது . ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தைவானை தனி நாடாக ஏற்றுள்ளன. மேலும், அமெரிக்கா அந்த நாட்டுக்கு ராணுவ உதவிகளை செய்வதுடன் படை தளத்தையும் அமைத்துள்ளது.



இதற்கிடையில், தைவான் நாட்டின் பாதுகாப்பை பலபடுத்தவும், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் அந்நாட்டு ராணுவத்துக்கு 66 அதிநவீன எப்16 ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்தது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
  
இந்நிலையில், தைவானுக்கு வழங்கவிருக்கும் அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்யும் விவகாரத்தில் சீனாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்கள் ஏதேனும் அங்கம் வகித்தால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Tags:    

Similar News