செய்திகள்
ஹபீஸ் சையத்

பயங்கரவாத செயல்களுக்கு நிதி - ஹபீஸ் சையத் உள்பட 13 பேர் மீது பாகிஸ்தான் வழக்குப்பதிவு

Published On 2019-07-04 11:17 GMT   |   Update On 2019-07-04 11:17 GMT
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹபீஸ் சையத் உள்ளிட்ட 13 தலைவர்கள் மீது பாகிஸ்தான் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் பயங்கரவாதி ஹபீஸ் சையத். இவர் பாகிஸ்தானில் ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும் பல பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில். மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சையத் உள்ளிட்ட 13 தலைவர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.



இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜமாத் உத் தவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது பயங்கரவாத செயல்களுக்கு நிதியளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லாகூர், முல்தான் மற்றும் குஜ்ரான்வாலா ஆகிய பகுதிகளில் மொத்தமாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.

பயங்கரவாத செயல்களுக்கான நிதி பரிமாற்றத்தை தடுக்க வேண்டும் என பாகிஸ்தானை உலக நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News