செய்திகள்

அடுத்தடுத்து அதிரடியாக இம்ரான் கான் - பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை

Published On 2018-09-17 08:48 GMT   |   Update On 2018-09-17 08:48 GMT
பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் அற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். #Pakistan #ImranKhan #AfghanRefugee
இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர்.

அவ்வாறு அகதிகளாக குடியேறிய மக்களுக்கு எந்த நாட்டிலும் குடியுரிமை உட்பட எவ்வித உரிமைகளும் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் அன்றாட வாழ்வுக்கு மிகவும் போராடும் சூழல் இருக்கிறது.



இந்த நிலையை ஒழிக்கும் முயற்சியில் தற்போது பாகிஸ்தான் அரசு களமிறங்கியுள்ளது. பாகிஸ்தானில் பிறக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றில் பேசிய பிரதமர் இம்ரான் கான், அகதிகள் எவ்வித அடையாளங்களும் இல்லாததால் வேலை வாய்ப்புகள் இன்றி அவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அதனால் நடைபெறும் பல்வேறு குற்றங்களை தடுக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் 2.7 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. #Pakistan #ImranKhan #AfghanRefugee
Tags:    

Similar News