செய்திகள்

இணையவழி நையாண்டிக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.56 லட்சம் அபராதம் - சவுதி அரசு அதிரடி

Published On 2018-09-05 10:40 GMT   |   Update On 2018-09-05 18:14 GMT
பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் நையாண்டி விமர்சனங்களை தண்டனைக்குரிய குற்றமாக சவுதி அரசு அறிவித்துள்ளது. #SaudiArabiaGovt #OnlineSatire
ரியாத்:

சவுதி அரேபியா நாட்டின் புதிய மன்னராக முஹம்மது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அரசின் செயல்பாட்டை விமர்சிப்பவர்கள் கடும் நடவடிக்கைக்கும் தண்டனைக்கும் உள்ளாகி வருகின்றனர்.

இதற்கு மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது வாழ்க்கைமுறை, மதம்சார்ந்த கோட்பாடுகள் பற்றி இணையதளங்கள் வழியாக கேலி, கிண்டல் மற்றும் விமர்சனங்கள் என்னும் போர்வையில் நையாண்டித்தனமான தகவல்களை பரப்பும் செயலை தண்டனைக்குரிய குற்றமாக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளது.


இந்த குற்றத்துக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்துடன் 3 மில்லியன் ரியால் (சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டு உள்ளது.  #SaudiArabiaGovt #OnlineSatire
Tags:    

Similar News