செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்ந்தது- சுனாமி அபாயம்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published On 2018-08-20 05:13 GMT   |   Update On 2018-08-20 05:13 GMT
பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் குழு ஆய்வில் தெரியவந்துள்ளது. #Tsunami
வாஷிங்டன்:

பருவநிலை மாற்றத்தால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

அதில் பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.

இங்கு அதிக அளவில் மக்கள் வாழ்கின்றனர். கடல்நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது.


தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுனாமி தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. #Tsunami #Climatechange
Tags:    

Similar News