search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவநிலை மாற்றம்"

    • 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
    • கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது.

    கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.

    2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. 


    இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.
    • பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதி விவசாயி கள் நீண்ட நாள் பயிர் சாகுபடிக்கு மாற்றாகக் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் பீன்ஸ், முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறி பயிர்களை சொட்டுநீர் பாசனம் மூலம் அதிகளவில் சாகுபடி செய்கின்றனர்.

    இங்கு அறுவடையாகும் பீன்ஸ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள, கர்நாடக மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில், பருவநிலை மாற்றத்தால் பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இது தொடர்பாக ஓசூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    ஓசூர் பகுதியில் நல்ல மண் வளம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், குளிர் பிரதேசங்களில் விளையும் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிக அளவில் விளைகின்றன.

    அதேநேரம் உரிய ஆலோசனை இல்லாததால் தரம் இல்லாத விதை, மருந்து, பருவநிலை மாற்றம் ஆகிய காரணங்களால் நோய் தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது.

    பீன்ஸ் கொடிகளில் நோய் தாக்கத்தால் பூக்கள் விடுவது தடுக்கப்படுகிறது. அப்படியே பூக்கள் வந்தாலும், காய்கள் தரமின்றி உள்ளது.

    ஒரு ஏக்கர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் பந்தல் அமைத்தல் என ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. தற்போது, சந்தையில் ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், மகசூல் பாதிப்பால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே, ஓசூர் பகுதியில் பீன்ஸ் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் உரிய தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் நோய் பாதிப்பின்போது, கட்டுப்படுத்த உரிய வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினர்.

    • நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
    • பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி ஜூன் மாதம் வரையில் வெப்ப சலனம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வந்தனர். மாவட்டம் முழுவதும் 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் இரவு நேரங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை வருகிற 5-ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஒருபுறம் சுட்டெரிக்கும் வெயில், மறுபுறம் மழை பெய்து வருவதால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

    இதையொட்டி இன்று காலை கடலூர் அரசு தலைமை மருத்துவமனை யில் ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெறுவதற்காக குவிந்தனர். மேலும் டோக்கன் விநியோகம் செய்யும் இடத்தில் நூற்றுக் கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து டோக்கன் பெற்றுக் கொண்டு அதன் பிறகு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு அவசர அவசரமாக சென்றனர்.

    இதன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனை முழுவதும் இன்று காலை முதல் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வந்தது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த திடீர் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகரித்த வண்ணம் இருந்து வருவதால் எந்தெந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகிறார்கள் என்பதனை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து அந்த பகுதிக்கு நேரில் சென்று முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தேவை யான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் முன்னெச் சரிக்கை நட வடிக்கை கள் மேற்கொள்வது தொடர்பாக சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • வெயில், குளிர் என மாறிமாறி பதிவு ஆவதால் சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது.
    • டாக்டரின் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.

    குடிமங்கலம் :

    பருவநிலை மாற்றம் காரணமாக வெயில், குளிர் என மாறிமாறி பதிவு ஆவதால் சாதாரண காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. மக்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும் என திருப்பூர் சுகாதாரத்துறையினர் அறி வுறுத்தி உள்ளனர்.

    டிசம்பர்- ஜனவரி மாதங்களில் நீடித்த குளிர், மாசி மாதம் பிறந்த போதும் தொடர்கிறது. ஒரு புறம் கோடைக்கு முன்னரே வெயில் கொளுத்தி வரும் நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரின் தாக்கம் குறையவில்லை.

    வழக்கமாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது வைரஸ் பரவலுக்கான வாய்ப்பு குறையும். வைரஸ் நீடிக்காது. ஆனால் நடப்பாண்டு தொடர் பருவநிலை மாற்றம் காரணமாக நிலை மாறியுள்ளது. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, அவ்வப்போது இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் பலருக்கும் துவங்கியுள்ளது.

    தொடர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் பலரும் கவலை அடைந்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சளி, காய்ச்சல் காரணமாக டாக்டரை சந்திக்க வருவோரின் எண்ணிக்கை ஒரு வாரமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    இது குறித்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், சுகாதாரமற்ற உணவு, மாசுபட்ட குடிநீர் மூலம் காய்ச்சல் பரவ வாய்ப்புகள் உருவாகிறது.முடிந்தவரை சுத்தமான குடிநீரை மட்டும் அருந்த வேண்டும். தண்ணீரை நன்கு காய்ச்சி ஆற வைத்து குடித்தால் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாது. டாக்டரின் ஆலோசனையை பெற்று மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நல்லது என்றார். 

    • கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
    • கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    விழுப்புரம்:

    மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் ஒரு வாரத்திற்கு மேலாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். இதுபோல் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்க ப்பட்டது. இப்பகுதியில் பெய்த கனமழை கடந்த சில நாட்களாக நின்று விட்டதால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

    இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று காலை முதல் பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சிறிய வகை மீன்களின் விலையும் அதிகரித்து உள்ளது என்று பொதுமக்கள் கூறுகி ன்றனர்.

    • திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது.
    • காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பருவநிலை மாறி மாறி வருவதால் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர் பகுதிகளில் வெயில், மழை என மாறி மாறி வித்தியாசமான சூழல் நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். இதனால் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.

    மேலும் குடிநீரை காய்ச்சி பருக வேண்டும். இது போல் தங்களது வீடுகளின் அருகில் மழைநீர் தேங்காத வகையில் பொதுமக்கள் பார்த்து கொள்ள வேண்டும். சிரட்டை, டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் வீடுகளின் அருகில் இருந்தால் உடனே அதனை அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு அகற்றாவிட்டால் அதில் தேங்கும் மழைநீர் மூலம் கொசு உற்பத்தியாகும். காய்ச்சல், சளி பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மருந்து , மாத்திரைகளை வாங்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • கடந்த சில நாட்களாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.
    • கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான்.

    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் மாவட்டம் முழுவதும், கடந்த சில நாட்க–ளாக அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுடன் கூடிய புற நோயாளிகளின் எண்ணிக்கை அதிக–மாகக்காணப்படுகிறது. முக்கியமா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தக் காய்ச்சல் வழக்க–மாக பருவநிலை மாற்றத்தினால் வரக்கூடிய காய்ச்சல்தான். இந்த காய்ச்சல் நம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் பரவ–லாக காணப்படுகிறது. கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் காலங்களில் இயல்பாக வரக்கூடிய ஒரு வகை காய்ச்சல்தான். எனவே, பொதுமக்கள் யாரும் இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை.

    இந்த காய்ச்சல் 4 அல்லது 5 நாட்களில் தானாகவே சரியாகக் கூடியது. இருப்பினும் அதிகப்படியான காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனை, டாக்டரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டுகிறோம். சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வைரஸ் கிருமி–கள் நம் சுவாசப் பாதையில் நுழையாமல் இருக்க, அனைவரும் முகக் கவசம் அணிவது அவசியம். மேலும் கைகளை சோப்புப் போட்டு கழுவவும், சுத்த–மான உணவுப் பொருட்களை சூடாக உட்கொள்ளவும் வேண்டும். சுடு நீரை பருகவேண்டும். காய்ச்சல் உள்ள குழந்தைகளை பள்ளிக்கும், பொதுவெளிக்கும் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

     சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு காலை 6 மணி முதல் சின்னசேலத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் காலையிலே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு காலை 10 மணிக்கு மழை நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

    ×