என் மலர்
நீங்கள் தேடியது "Soumya Swaminathan"
- குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும்.
- காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது
தமிழக அரசு சார்பில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு சூடாகவும், சுவையாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2,430 நகர்ப்புற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன்பெறுவர்.
இந்நிலையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசுக்கு மருத்துவர் சவுமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
காலை உணவுத் திட்டத்தில் பல நன்மைகள் இருக்கிறது. சத்துணவாக கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
நம் நாட்டில் ரத்தசோகை அதிகமாக உள்ளது. டயட்டில் புரோட்டின் குறைவாக உள்ளது. காலை உணவுத் திட்டத்தில் சத்தான உணவு வகைகளை சேர்த்துள்ளார்கள்.
குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு வகுப்பில் பாடம் கற்கும்போது நன்றாக படிக்க முடியும். இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கணக்கு, அறிவியலில் மதிப்பெண் அதிகம் பெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. வெறும் வயிற்றில் இருந்தால் வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியாது.
இந்த திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகள், பெண் குழந்தைகள் பள்ளியில் சேருவது அதிகரித்துள்ளது. இடைநிற்றல் குறைந்துள்ளது. பள்ளியில் காலையில் உணவு கிடைக்கும் என்று தெரிந்து குழந்தைகள் ஆர்வமாக வருகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தால் சமைக்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. ஏழை வீட்டில் இருந்து வந்தால் கூட இங்கு நல்ல சத்துணவு கிடைப்பதால் அவர்களுக்கும் படிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கிறது.
குழந்தைகள் வளம் பெற்றால் தான் நாடு வளம் பெறும்.
மதிய உணவுத் திட்டம் நிறைய நாடுகளில் உள்ளது. ஆனால் காலை உணவுத் திட்டம் என்பது எனக்கு தெரிந்து தமிழ்நாடு தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.
காலை உணவுத்திட்டம் ஆரம்ப பள்ளியில் இருந்து ஆரம்பித்து இன்று நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளி என்று விரிவடைந்துள்ளது.
இதே போல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பித்த HPV Vaccination திட்டம் 9 வயது முதல் 12 வயதுக்குள் உள்ள பெண் பிள்ளைகளுக்கு தமிழகம் முழுவதும் கொடுக்கப்போகிறார்கள். இந்த திட்டம் தமிழ்நாட்டின் ஒரு ரோல் மாடலாக இருக்கப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தரமணி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் சார்பில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
- இதில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பங்கேற்றார்.
சென்னை:
சென்னை தரமணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) சார்பில் தேசிய அறிவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவருமான
சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:
அறிவியல் வளர்ச்சி உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள ஒரு ஆண்டில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடிந்தது.
கொரோனா தொற்று அடியோடு ஒழிந்து விட்டதாக கருதமுடியாது. மொத்தம், 27 வகை வைரஸ்கள் உள்ளதால் எந்த வகை வைரஸ் தாக்கும் என கணிக்க முடியாது. இனிமேல் மனிதர்கள் கூடவே வைரஸ் இருக்கும்.
தடுப்பூசி போட்டதாலும், இயற்கை சூழல் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததால், கொரோ தாக்கம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
குழந்தைகளுக்கு எளிதாக கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தற்போது பரவும் காய்ச்சல் குறித்து தீவிர பரிசோதனை தேவை. காற்றில் பரவும் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.
எந்த வைரஸ் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
- பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை.
- இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றார்.
புதுடெல்லி:
அஜர்பைஜானில் நவம்பர் 11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி 29-வது ஐ.நா. பருவநிலை (சிஓபி29) மாநாடு நடந்து வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள எல்லாருமே அதிக வெப்பத்திற்கும், நோய்ப் பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உள்ளது.
கிராமப்புறங்களில் சமையலுக்கு விறகுகளையும் மரக்கட்டைகளையும் தொடர்ந்து பயன்படுத்தும்போது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, தூய்மை எரிசக்திக்கு ஒவ்வொருவரும் மாறவேண்டும் என்பதே முன்னுரிமையாக உள்ளது.
இது, உள்புறக் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை மட்டும் குறைக்காது.
இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பது நீடித்த நிலைத்தன்மைக்கான முக்கிய படி.
பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை.
காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவது முதல் வேளாண்மை சுழற்சி பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வரையிலான பாதிப்புகள் அவை என தெரிவித்துள்ளார்.
ஆசிய அணிகள் பிரிவு செஸ் போட்டி ஈரான் நாட்டில் உள்ள ஹமதான் நகரில் ஜூலை 26-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப் போட்டியில் விளையாட இருந்த இந்தியாவின் 5-ம் நிலை வீராங்கனை சவுமியா சுவாமிநாதன் அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் தலையில் முக்காடு அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் முக்காடு அணிய மாட்டேன் என்று கூறி அவர் விலகியுள்ளார். இது தொடர்பாக 29 வயதான சவுமியா கூறியதாவது:-

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சவுமியா உலக ஜூனியர் பட்டத்தை வென்றவர். உலக தர வரிசையில் தற்போது 97-வது இடத்தில் இருக்கிறார்.#SoumyaSwaminathan #Chess






