என் மலர்tooltip icon

    இந்தியா

    பருவநிலை மாற்றம்: AC-க்களில் வெப்பநிலை கட்டுப்பாடு? - அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல்
    X

    பருவநிலை மாற்றம்: AC-க்களில் வெப்பநிலை கட்டுப்பாடு? - அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல்

    • தற்போது 16 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வகையில் ஏசி-க்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பம், மின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் மற்றும் வாகனங்கள் விரைவில் 20 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை தரப்படுத்தப்பட்ட ஏசி வெப்பநிலை அமைப்புகளைக் கொண்டிருக்கும் என்று மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:

    ஏசி-க்களில் குறைந்தபட்ச வெப்பநிலை அளவை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போது 16 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வகையில் ஏசி-க்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலை விரைவில் வெளியிடப்படும்.

    குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என இருக்கும். 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக ஏசிக்களில் மாற்றம் செய்ய முடியாது. வீடுகள், அலுவலகங்கள் மட்டுமன்றி, கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளது.

    பருவநிலை மாற்றம், அதிகரித்து வரும் வெப்பம், மின் தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×