என் மலர்
நீங்கள் தேடியது "mosquitoes"
- கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
- புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணை யாளர் (பொறுப்பு) காளி முத்து அறிவுறுத்தலின்படி கொசு ஒழிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலாண்மை
நெல்லையில் பரவலாக சாரல்மழை பெய்து வருவதால் மேலப்பாளையம் மண்டலத்தில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நட ராஜன் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக கள பணியாளர்கள் ஆய்வு செய்து சுற்றுப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள், சிரட்டைகள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொ ருட்களை அகற்ற வேண்டும் என வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி அதனை அகற்றினர்.
பூந்தொட்டிகள், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வகையில் தினசரி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் புதிய கட்டிடங்களை ஆய்வு செய்து தண்ணீர் தேங்காத வகையில் பராமரித்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மேலப்பாளையம் பகுதியில் கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கப்பட்டது.
- வீட்டில் பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
பல்லடம்:
பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க அனைத்து வீதிகளிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பல்லடம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சங்கர் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொது மக்களது ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்தப் பணியை முழுமையாக செயல்படுத்த முடியும். வீட்டில் குப்பைகள், பயன்படுத்தாத டயர்கள், அம்மிக்கல் போன்றவற்றில், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.
எனவே நல்ல தண்ணீரை உரிய முறையில் மூடி வைக்கவேண்டும். பொது மக்கள் தண்ணீரை திறந்த நிலையில் வைக்ககூடாது. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும். இந்தநிலையில் அந்த தண்ணீரை அப்புறப்படுத்துமாறு கூறினாலும், பொது மக்கள் கேட்பதில்லை. நிறைய வீடுகளில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் 'டயர்'களில் தண்ணீர் தேங்கி, அதில் கொசு உற்பத்தியாகிறது.
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை வெளியேற்ற சாக்கடைகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் சாக்கடையில் குப்பை போன்றவற்றை போட்டுவிடுவதால் அங்கு கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாகி விடுகிறது. இதுபோன்ற நிலையை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொசுக்களை ஒழிக்க உள்ளாட்சி அமைப்புகள் முன்வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உருவாகி வரும் கொசுக்கள் சாக்கடையில் மட்டுமல்லாமல் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகி வேகமாக பரவுகிறது. இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா கொசுக்கடியால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். மழை இல்லாவிட்டாலும் அவ்வப்போது பெய்யும் மழையினால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய்களை பரப்பும் வேலையை தொடங்கி விட்டன.
வீடு, கடைகளில் மட்டுமல்ல வெளியில் நின்றாலும் கொசுக்கடியின் தாக்கத்தை உணர முடிகிறது. இதனால் வேலைகள் முடியும் முன்பு அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், உடல்வலி, போன்ற வியாதிகளும் வந்து மருத்துவமனை செல்லும் சூழல் உள்ளது.
சிலர் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகும் கொடுமையும் நடக்கிறது. கொசு ஒழிப்பில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் பெரும்பாலான உள்ளாட்சிகளில் சாக்கடை, தண்ணீர் தொட்டிகள், குப்பைகள் அகற்றப்படாததால் நோய்களுக்கு அச்சாரம் போடப்படுகிறது
கொசுத்தொல்லை விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு ஊராட்சிகளில் மந்தநிலை காணப்படுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் போர்க்கால அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளிலும் கொசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- மழையால் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.
- வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
உடுமலை :
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனைப்பயன்படுத்தி, விவசாயம் சார்ந்த பணிகள் வேகமெடுத்துள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது.அதேநேரம் கிராம ஊராட்சிகளில் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ஊராட்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளுக்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். அபேட் மருந்து தெளிப்பது, கொசு மருந்து அடிப்பது, கழிவுநீர் சாக்கடைகளில் கொசு மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த கிராம ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காய்ச்சல், வயிற்றுப்போக்கு என நோய் பாதிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டால் பொது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம்.
- அராங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன என்பதால் கொசுக்களை வெளியிடுவதில் தாமதமாகிறது.
டெங்கு மற்றும் சிக்குன்குனியாவைக் கட்டுப்டுத்த ஐசிஎம்ஆர்- வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் சிறப்பு பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள ஐசிஎம்ஆர் வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் கடந்த நான்கு ஆண்டுகளாக வொல்பாச்சியா என்கிற கொசுக்கள் உற்பத்தி மீது ஆய்வு செய்து அதற்கான பணிகளை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ஐசிஎம்ஆர்- விசிஆர்சி மருத்துவர் அஷ்வனி குமார் கூறுகையில், " டெங்கு மற்றும் சிக்குன்குனியா சொசுக்களுக்கு எதிராக பெண் கொசுக்களை உருவாக்கி உள்ளோம். ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் பெண் கொசுக்களை விடுவிப்போம். இது வைரஸ்கள் இல்லாத லார்வாக்களை உருவாக்கும். நாங்கள் கொசுக்கள் மற்றும் முட்டைகளை உருவாக்கியுள்ளோம். அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.
இதற்கான ஆய்வு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்க ஒப்புதல்கள் இன்னும் நிலுவையில் உள்ளன" என்றார்.