search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ocean"

    • 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.
    • கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது.

    கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 'ஆரல்' எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள் திசைமாறிய பிறகு இது சுருங்கத் தொடங்கியது.

    2010 -ல் பெரும்பாலும் வறண்டது. 'ஆரல்' கடல் காணாமல் போனதற்கான காரணம் குறித்து விரிவாக ஆய்வு நடந்தது. 1960-ல் சோவியத் யூனியன் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மேனிஸ்தான் ஆகிய வறண்ட சமவெளிகளில் நீர்ப்பாசன நோக்கத்திற்காக ஆற்றுத்தண்ணீர் திசை திருப்பப்பட்டது. 


    இப்பகுதியின் 2 பெரிய ஆறுகளான வடக்கில் சிர்தர்யா மற்றும் தெற்கில் அமுதர்யா ஆறுகள் பாலைவன பகுதியில் பருத்தி மற்றும் பிற பயிர்கள் உற்பத்தி செய்வதற்காக திசைதிருப்பி விடப்பட்டன. இதனால் ஆரல் கடல் வற்ற தொடங்கியது. ஆறுகளின் தண்ணீரைத் திருப்பி பாலைவனத்தை விளைநிலமாக உருவாக்கிய பிறகு, நீர்வரத்து வெகுவாகக் குறைந்து கடல் முழுவதும் ஆவியாகிவிட்டது. கடந்த 50 ஆண்டுகளில் ஆரல் கடல் முழுவதும் வற்றி காணாமல் போய் நிலம் போல் மாறிவிட்டது. இது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    கொலம்பியா:

    கொலம்பியா கடற்படைக்கு சொந்தமான சான் ஜோஸ் என்ற கப்பல் கடந்த 1,708-ம் ஆண்டு இங்கிலாந்து படையால் கார்டஜீனா துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டது. கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 100 அடிக்கு கீழே ஆழ் கடலில் மூழ்கி கிடக்கும் இந்த கப்பலை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கப்பலில் 200 டன் எடையுள்ள மரகதலிங்கம், வெள்ளி மற்றும் 11 பில்லியன் ( இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.91.51 ஆயிரம் கோடி) தங்க நாணயங்கள் அடங்கிய பெரிய அளவிலான புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆழ்கடலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வின் போது மூழ்கி கிடந்த பழமையான கப்பலின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கப்பல் பாகத்தில் இருந்து சில தங்க நாணயங்கள், ஜாடிகள், குவளைகள் சிக்கியது. மூழ்கி கிடக்கும் கப்பலில் இன்னும் இந்திய ரூபாய் மதிப்பில் மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரம் கோடி ( 20 பில்லியன்) மதிப்பிலான பொக்கிஷங்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இந்த கப்பலை 2026-ம் ஆண்டுக்குள் மீட்க கொலம்பியா அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேதமடைந்த கப்பலை மீட்டால் தான் அதில் எவ்வளவு தங்க நகைகள் மற்றும் பொக்கிஷங்கள் உள்ளது என்பது தெரிய வரும்.

    • பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.
    • கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    நெல்லை:

    காற்றின் வேகம் அதிகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலை எச்சரிக்கையின்படி நெல்லை மாவட்ட மீனவர்கள் வருகிற 9-ம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 நாட்டுப் படகுகள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    நெல்லை மாவட்டத்தில் பாரம்பரிய முறையில் சுமார் 1,200 நாட்டு படகுகளில் 10 கடற்கரை மீனவ கிராமங்களை சார்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கையின் படி மன்னார் வளைகுடா, கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதன் தென் தமிழக கடலோர பகுதியில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என எச்சரித்துள்ளது.

    இதனை அடுத்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நெல்லை மாவட்ட மீனவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    ×