செய்திகள்

நாங்க கொடுத்தால் அது சீண்டல் நீங்க கொடுத்தால் அதிர்ஷ்டமா? - உலகக்கோப்பையில் முத்தச் சர்ச்சை

Published On 2018-07-05 15:41 GMT   |   Update On 2018-07-05 15:41 GMT
தென்கொரிய பத்திரிகையாளர் ஒருவருக்கு இரண்டு ரஷிய இளம்பெண்கள் முத்தம் கொடுத்துள்ள நிகழ்வு கிண்டல்களையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது. #Russia #WorldCup
மாஸ்கோ:

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதற்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் செய்தியாளர்கள் ரஷியாவில் குவிந்துள்ளனர். பெண் செய்தியாளர்கள் கேமரா முன்னால் நின்று பேசும் போது, பல இளைஞர்கள் குறும்பாக அவர்களுக்கு முத்தம் கொடுக்கின்றனர்.

சிலர் இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டாலும் பெண்கள் மீதான பாலியல் சீண்டலின் நாகரீக வடிவம் இது என பலர் பெண்ணிய ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், தென்கொரிய தொலைக்காட்சியை சேர்ந்த ஆண் பத்திரிகையாளர் ஒருவர் மாஸ்கோ நகரில் கால்பந்து போட்டி குறித்து கேமரா முன் விவரித்து கொண்டிருந்தார்.



அப்போது, இரண்டு ரஷிய இளம்பெண்கள் அடுத்தடுத்து அவரது கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த காட்சி நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முத்தம் வாங்கிய அந்த பத்திரிகையாளர் வெட்கத்துடன் சிரித்து கொண்டார்.

‘அடிச்சது பார் யோகம்’ என பலர் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவிக்க, பலர் பொங்கியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆண்கள் முத்தம் கொடுத்தால், அது பாலியல் சீண்டல் என்றால், இதுவும் பாலியல் சீண்டலே ஆனால் இதனை யாரும் கண்டிக்க மறுக்கின்றனர் என பலர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News