செய்திகள்

கின்னஸில் இடம்பெற்ற உலகின் மிக வயதான ஒராங்குட்டான் மரணம்

Published On 2018-06-19 05:51 GMT   |   Update On 2018-06-19 05:51 GMT
ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருகக்காட்சி சாலையில் உலகின் மிக வயதான ஒராங்குட்டான் என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற புயான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #orangutan #puan
கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் பெர்த் மிருக்க்காட்சிசாலையில் உள்ள 62 வயது ஒராங்குட்டானின் பெயர் புயான். உலகின் மிக வயதான ஒராங்குட்டான் என்ற பெருமையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மலேசியா நாட்டில் 1956 ஆம் ஆண்டு பிறந்த புயான் அங்குள்ள சுல்தான் ஜோகூர் என்ற மிருகக்காட்சிசாலையிலிருந்து 1968 ஆம் ஆண்டு இந்த பெர்த் மிருகக்காட்சிசாலைக்கு அன்பளிப்பாக வந்து சேர்ந்தது.

பொதுவாக ஒராங்குட்டான் வகை குரங்குகள் 50 வயதிற்கு மேல் உயிர் வாழாது என்பதால் இது சாதனையாக கருதப்பட்டது. இந்த குரங்கிற்கு 11 குழந்தைகள் மற்றும் 54 சந்ததியினர் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் பரவி காணப்படுகின்றன.

இந்நிலையில், 62 வயதான புயான் நேற்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். #orangutan #puan
Tags:    

Similar News