இந்தியா

ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் முயற்சி- ஸ்மிருதி இரானி

Published On 2024-05-26 03:52 GMT   |   Update On 2024-05-26 03:52 GMT
  • மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவைச் சேர்ந்தவரை முதல்வராக நியமிக்கும் என்றார்.
  • தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தவாறு இடைவிடாது வேலை செய்கின்றனர்.

புவனேசுவரம்:

ஒடிசா வளங்களைக் கொள்ளையடிக்க தமிழகத்தில் உள்ளவர்கள் இடைவிடாது வேலை செய்து வருவதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஒடிசாவின் குஜங் பகுதியில் நேற்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் பேசியதாவது:-

ஒடிசாவில் ஆட்சியில் உள்ள பிஜு ஜனதா தன அரசு நிலம். நிலக்கரி, மணல் மற்றும் சுரங்க கொள்ளை கும்பல்களை வளர்த்தது. கொள்ளையடிக்க மாநில ஒடிசாவின் வளங்களை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்தவாறு இடைவிடாது வேலை செய்கின்றனர்.

இதற்கு மாறாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கப் பணியாற்றி வருகிறது. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவைச் சேர்ந்தவரை முதல்வராக நியமிக்கும் என்றார். ஒடிசாவில் 4 கட்டங்களாக பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளநிலையில், ஜூன் 1-ல் கடைசி கட்டத்தேர்தல் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News